Just In
- 1 min ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது....
- 9 hrs ago
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- 10 hrs ago
நீங்க விரும்பி சாப்பிடும் இந்த பொருட்கள் உங்களுக்கு சீக்கிரம் வழுக்கை வர வைக்குமாம்... ஜாக்கிரதை!
- 12 hrs ago
உங்க உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அளவுக்கதிகமா கொலஸ்ட்ரால் இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
Don't Miss
- News
ராணி எலிசபெத் கொடுத்த மது விருந்தை மறுத்தவன் நான்.. அமைச்சர் துரைமுருகன் கலகல பேச்சு
- Movies
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரை சந்தித்த கமல்ஹாசன்.. டிரண்டாகும் போட்டோ!
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Finance
ரஷ்யாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. உங்க சகவாசமே வேண்டாம் என வெளியேற திட்டமிடும் சிஸ்கோ!
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Technology
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
பானை மாதிரி இருக்க உங்க வயித்து தொப்பையை ஆயுர்வேத முறைப்படி எப்படி ஈஸியா குறைக்கலாம் தெரியுமா?
உடல் எடையை மற்றும் தொப்பையை குறைப்பது என்பது சாதாரண காரியமல்ல. இதற்காக உங்கள் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதேபோன்று உங்கள் உணவில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். உடல் எடையை குறைக்க சந்தையில் கூறும் பொருட்களை முதலில் தவிருங்கள். எந்த பக்கவிளைவும் இல்லாமல் உங்கள் உடல் எடையை குறைக்க இயற்கையான வழியை பின்பற்றுங்கள். உங்கள் உடல் எடை அதிகரிப்பிற்கு பல காரணங்கள் இருக்கலாம். தொப்பையை குறைக்க நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.
நீங்கள் வயிற்று கொழுப்பை இழக்க போராடும் ஒருவராக இருந்தால், ஆயுர்வேதத்தின் படி சில வாழ்க்கை முறை மாற்றங்கள் எடையை குறைக்க உங்களுக்கு உதவும். இக்கட்டுரையில், பல எளிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவை பின்பற்றப்படும்போது இயற்கையாகவே உங்கள் தொப்பை கொழுப்பை இழந்து நல்ல உடல் அமைப்பை பெறுவீர்கள்.

உதவிக்குறிப்பு 1
மதிய உணவு நேரத்தில் உங்கள் மொத்த தினசரி கலோரிகளில் 50 சதவிகிதத்தை உட்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஏனெனில் அந்த நேரத்தில் உங்கள் செரிமான சக்தி வலுவானது. இரவு உணவின் போது குறைந்தபட்ச கலோரிகளை சாப்பிடுங்கள். இரவு உணவை 7 மணிக்கு முன் உட்கொள்ள வேண்டும்.
MOST READ: நம் முன்னோர்கள் போல நீங்களும் கட்டுமஸ்தான உடலை பெற என்னென்ன உணவுகளை சாப்பிடணும் தெரியுமா?

உதவிக்குறிப்பு 2
சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டு உணவுகள் உங்கள் தொப்பை கொழுப்பை இழப்பதற்கு பெரிய தடையாய் இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளின் பயன்பாட்டைக் குறைக்கவும். இனிப்பு பானங்கள், இனிப்புகள், பாஸ்தா, ரொட்டி, பிஸ்கட் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளிலிருந்து முற்றிலுமாக விலகி இருங்கள்.

உதவிக்குறிப்பு 3
காலையில் வெறும் வயிற்றில் வெந்தயப் பொடியை தண்ணீருடன் சேர்த்து உட்கொள்ளவும். வெந்தய விதைகளை ஒரே இரவில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.

உதவிக்குறிப்பு 4
கார்சினியா கம்போஜியா பழத்தை உட்கொள்ளுங்கள் (குடம்புளி). இந்த பழம் உங்களுக்கு சுவையை தருகிறது. மேலும், செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இவை அனைத்தும் எடை இழக்க உதவுகிறது.
MOST READ: மருந்துகளே இல்லாமல் உங்க இரத்த அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா?

உதவிக்குறிப்பு 5
உங்கள் உணவில் திரிபாலாவைச் சேர்க்கவும். இது உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது மற்றும் உங்கள் செரிமான அமைப்பை புதுப்பிக்கிறது. ஒரு டீஸ்பூன் திரிபலா பொடியை எடுத்து, இரவு உணவிற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் குடிக்கவும்.

உதவிக்குறிப்பு 6
உலர்ந்த இஞ்சி தூள் கொழுப்பை எரிக்கப் பயன்படும் தெர்மோஜெனிக் சத்துக்களை கொண்டுள்ளது. உலர்ந்த இஞ்சியை சூடான நீரில் உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் அதிகப்படியான கொழுப்பை எரிக்கவும் உதவும். உங்கள் வீட்டில் உலர்ந்த இஞ்சி பொடி இல்லை என்றால், நீங்கள் கறி மற்றும் தேநீருடன் பச்சையாக இஞ்சியை உட்கொள்ளலாம்.

உதவிக்குறிப்பு 7
நீங்கள் தினமும் 30 நிமிடங்கள் வேகமான நடைப்பயிற்சி செய்வது தொப்பை கொழுப்பை எரிக்க மற்றொரு சிறந்த வழியாகும். உங்கள் உடற்பயிற்சி வழக்கத்தில் யோகா மற்றும் பைலேட்டையும் சேர்க்கலாம். உடல் எடையை குறைக்க மேலும் பல பயிற்சிகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம்.
MOST READ: இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்...ஜாக்கிரதை!

உதவிக்குறிப்பு 8
தாகம் எடுக்கும்போதெல்லாம் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை செயல்படுத்துவதன் மூலம் வெதுவெதுப்பான நீர் எடை இழப்புக்கு உதவுகிறது.

உதவிக்குறிப்பு 9
உங்கள் உணவை சரியாக மென்று சாப்பிடுங்கள். உமிழ்நீருடன் கலக்கும்போது கார்போஹைட்ரேட்டுகளின் செரிமானம் உங்கள் வாயில் தொடங்குகிறது. உணவை சரியாக மென்று சாப்பிடுவது செரிமானப் பகுதிக்குச் செல்வதற்கு முன்பு வாயில் உள்ள உணவை உடைக்க உதவுகிறது. இது திருப்தி ஹார்மோனை செயல்படுத்த உதவுகிறது மற்றும் இதனால் வயிறு நிரம்பியவுடன் மனதை எச்சரிக்கிறது. அளவான உணவு உண் உங்களுக்கு உதவுகிறது.