Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
ஹீமீகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் உள்ள புரோட்டீன் அளவாகும். இது உடலின் மற்ற பாகங்களுக்கு ஆக்ஸிஜனை செலுத்தி அவற்றிலிருந்து கார்பன் - டை- ஆக்ஸைடை உறிஞ்சி நுரையீரலுக்கு கடத்துகிறது. அப்படி உங்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறது எனில் இரத்தத்தில் சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
உடலில் ஹீமோகுளோபின் இல்லாவிட்டால், பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு இரத்த சோகை (anemia) என்று பெயர். இந்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். இரத்த பரிசோதனைகள் செய்வதம் மூலம் இரத்தத்தில் ஹியோகுளோபின் எவ்வளவு உள்ளது என்பதைக் அறியலாம்.

மருத்துவர்களின் கணக்கீடுகளின்படி, ஆண்களில் ஹீமோகுளோபின் அளவு 14 முதல் 18 வரையிலும், பெண்களில் 12 முதல் 16 வரையிலும் இருக்க வேண்டும். சிலருக்கு 8,9, 6 என்று மிகக் குறைவு. அவர்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களாக கருதலாம். உடல் முழுவதும் ஆக்ஸிஜனை வழங்குவதற்கு ஹீமோகுளோபின் பொறுப்பு. ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், ஆக்ஸிஜனும் குறைந்து, பி.பி., சோர்வு மற்றும் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படும். மருந்துகளை விட உணவின் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்தால் ஆரோக்கியம் மேம்படும். எந்த உணவுகள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
பீட்ரூட்
பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கின்றன. எனவே பீட்ரூட் அவசியம். இதனை சிறு துண்டுகளாக நறுக்கி ஜூஸ் செய்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கருப்பு எள்
கருப்பு எள்ளில் ஹீமோகுளோபினை உற்பத்தி செய்யும் சத்துக்களும் நிறைந்துள்ளன. இரும்புச்சத்துடன், இதில் கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், வைட்டமின் ஈ, வைட்டமின் பி2 மற்றும் ஃபோலேட் உள்ளது. இந்த கருப்பு எள் நேரடியாகவோ அல்லது எந்த வடிவத்திலும் எடுக்கலாம்.
விதைகள்
இரும்புச்சத்து உள்ள விதைகளை சாப்பிட வேண்டும். தர்பூசணி, ஆப்பிள், மாதுளை ஆகியவற்றில் இரும்புச்சத்துடன் கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த விதைகளை தினமும் மாலையில் சாப்பிட்டு வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கிறது.
பேரீச்சம்பழம் மற்றும் திராட்சையும்
பேரீச்சம்பழம் மற்றும் திராட்சையும் இரும்புச்சத்து உள்ளது. காலையில் எழுந்தவுடன் இவற்றை உட்கொள்வது நல்ல பலனைத் தரும். இதை தினமும் சாப்பிட்டு வந்தால், சில வாரங்களில் ஹீமோகுளோபின் அதிகரிப்பதில் நல்ல பலன் கிடைக்கும்.
கீரைகள்
ஹீமோகுளோபின் அளவை விரைவாக அதிகரிக்க, தினமும் கீரைகளை சாப்பிட வேண்டும். இவற்றை சமைத்து குழம்பாகவோ அல்லது பொறியலாகவோ அல்லது கழுவி அரைத்து சாறுகளாகவோ குடிக்கலாம்.
பருப்பு வகைகள்
இரும்பு சத்து நிறைந்த பருப்பு வகைகள் ஆரோக்கியமான ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.
மாதுளை
மாதுளையில் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைவாக இருப்பதால் இது இரும்புச் சத்தை துரிதமாக உறிஞ்சி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.
ஆப்பிள்
ஆப்பிள் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைந்த பழம். எனவே இது ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
புரக்கோலி
புரக்கோலி இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி, ஃபோலேட் நிறைந்த பூ என்பதால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவுகிறது. அதோடு இரும்பு சத்து உறிஞ்சுவதையும் மேம்படுத்துகிறது.
பாதாம்
நட்ஸ் வகைகளில் பாதாமுக்கு எப்போதும் தனி இடம் கொடுப்பதற்கு அதில் கொட்டிக்கிடக்கும் நன்மைகளுக்காகத்தான். அதில் ஒன்றுதான் இரும்பு சத்து அதோடு விட்டமின் ஈ உள்ளது. எனவே ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை பராமரிக்கிறது.
பீன்ஸ் மற்றும் கொட்டை வகைகள்
வெள்ளை பட்டாணி, பச்சை பட்டாணி, பீன்ஸ் வகைகள் போன்றவை இரும்பு சத்துக்கு பெயர் போனவை. அதோடு அதில் ஃபோலேட் மற்றும் புரோட்டீன் நிறைவாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.பூசணி விதைகள்
பூசணி விதைபீன்ஸ் மற்றும் கொட்டை வகைகள்
வெள்ளை பட்டாணி, பச்சை பட்டாணி, பீன்ஸ் வகைகள் போன்றவை இரும்பு சத்துக்கு பெயர் போனவை. அதோடு அதில் ஃபோலேட் மற்றும் புரோட்டீன் நிறைவாக இருப்பதால் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications