Latest Updates
-
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளிள் இந்த பொருளை வாங்கி வையுங்க.. -
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா? -
2027 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகுதாம் -
நவம்பர் 25-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப்போகுது! -
25 லட்சத்துக்கு விற்கப்படும் ஒரு வீட்டுச்செடி - இந்த செடியில் அப்படி என்ன அதிசயம் இருக்கு தெரியுமா? -
மதியம் சிம்பிளா சமையலை முடிக்கணுமா? அப்ப இந்த சாம்பாரும், உருளைக்கிழங்கு ப்ரையும் செய்யுங்க.. -
வெண்டைக்காயுடன் தயிர் சேர்த்து இந்த மாதிரி தாபா ஸ்டைல் மசாலா செய்யுங்க - சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் -
தீபாவளி பலகாரங்களை ஒரு பிடி பிடித்துவிட்டீர்களா? தீபாவளிக்குப் பிறகு குடிக்க வேண்டிய 5 பானங்கள் இதோ! -
இந்தியாவின் NRI கிராமம் என்று அழைக்கப்படும் பணக்கார கிராமம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா?
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை!
Kandha Sashti Viradham 2026: தமிழ் கடவுளான முருகப்பெருமானுக்கு உகந்த பல விரதங்களில் கந்த சஷ்டி விரதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு மாதமும் சஷ்டி திதியில் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபட்டாலும், ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விழாவுக்கு தனி மகத்துவம் உண்டு. ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழா, பக்தி, நம்பிக்கை மற்றும் தீமையை அழித்து நன்மை வெல்லும் தத்துவத்தை உணர்த்தும் முக்கியமான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

புராணங்களின்படி, தேவர்களைத் துன்புறுத்தி வந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை அழித்து, தேவர்களைக் காப்பதற்காக முருகப்பெருமான் போரிட்டார். ஆறு நாட்கள் நடைபெற்ற இந்தப் போரின் இறுதியில், வளர்பிறை சஷ்டி திதியன்று சூரபத்மனை வதம் செய்தார். இந்த நிகழ்வே சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் நினைவாகவே கந்த சஷ்டி விழாவின் ஆறாவது நாளில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் பல கோயில்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆறு நாட்களிலும் பக்தர்கள் விரதம் இருந்து, முருகப்பெருமானின் திருநாமங்களைச் சொல்லி வழிபடுகின்றனர். சிலர் முழு உபவாசம் இருக்கிறார்கள்; இன்னும் சிலர் தங்களது உடல்நிலைக்கு ஏற்றவாறு உணவுக் கட்டுப்பாட்டுடன் விரதம் கடைப்பிடிக்கின்றனர். இப்போது கந்த சஷ்டி விரதம் 2026 எப்போது தொடங்கி எப்போது நிறைவடைகிறது? இந்த விரதத்தின்போது செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை என்னென்ன என்பன குறித்து காண்போம்.
2026 கந்த சஷ்டி விரதம் எப்போது?
கந்த சஷ்டி விரத தொடக்கம் - 2026 நவம்பர் 10 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை
கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் - 2026 நவம்பர் 15 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
திருக்கல்யாணம் - 2026 நவம்பர் 16 ஆம் தேதி, திங்கட்கிழமை
இந்த கந்த சஷ்டி விரதத்திற்கு என்று தனிப்பட்ட விரத முறைகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. அவரவர் வசதிக்கேற்ப ஏற்ப விரதத்தை கடைப்பிடிக்கலாம். ஆனால் இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளும் போது செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்து அவசியம் தெரிந்து அவற்றை தவறாமல் பின்பற்றினாலே, முருகனின் அருளைப் பெறலாம்.
சஷ்டி விரதத்தின் போது செய்ய வேண்டியவைகள் மற்றும் செய்யக்கூடாதவைகள்
* கந்த சஷ்டி விரதத்தின் போது அனைவருமே கட்டாயம் பட்டினி விரதம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேவைப்படுபவர்கள் மட்டும் முடிந்தால் பட்டினி விரதம் இருந்தால் போதும். அதுவும் பட்டினி விரதம் இருந்தால், கட்டாயம் தண்ணீர் குடிக்க வேண்டும். எந்த விரதமாக இருந்தாலும், தண்ணீர் குடிப்பதை மறக்கக்கூடாது. மற்றவர்கள் வெறும் சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு, முருக வழிபாடுகளை செய்தால் போதும்.
* விரதத்தின் போது பாய், படுக்கையில் தூங்கலாமா என்ற கேள்வி நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்தால், பாய், படுக்கையில் படுக்கக்கூடாது. மற்றபடி தூங்கலாம்.
* இரவு நேரத்தில் தூங்கலாமா என்ற கேள்வியும் சிலருக்கு எழலாம். தாராளமாக இரவு நேரத்தில் தூங்கலாம். ஆனால் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது.
* சஷ்டி விரத காலத்தில் அவசியம் தவிர்க்க வேண்டிய முக்கியமான ஒன்று தேவையில்லாமல் பொழுதை வீணாக்கக்கூடாது, வெட்டி பேச்சு பேசக்கூடாது, வம்பு இழுப்பது கூடாது. இவை அனைத்தையும் நிறுத்திவிட்டு, முழுக்க முழுக்க முருக சிந்தையிலேயே இருக்க வேண்டும். எப்படி நம்மை அறியாமல் நாம் சுவாசித்துக் கொண்டிருக்கிறோமோ, அதேப் போல் மனதிற்குள் "முருகா முருகா" என்றோ, "ஓம் சரவண பவ" என்றோ அவரது நாமத்தை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருங்கள். இது மேலும் ஆற்றலை வலுப்படுத்தும்.
* விரதத்தை நிறைவு செய்யும் போது, அதிகமான உணவுகளை உடனடியாக எடுக்காமல், எளிமையான உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொள்ளுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
