Latest Updates
-
இந்தியாவின் NRI கிராமம் என்று அழைக்கப்படும் பணக்கார கிராமம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 7 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
கையேந்தி பவன் வடகறி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. இட்லிக்கு அள்ளும்.. -
நவம்பர் 09, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும் - இல்லனா கஷ்டப்பட வேண்டியிருக்கும் -
Diwali 2026: பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்! கண் மருத்துவர் எச்சரிக்கை! -
Diwali 2026: தீபாவளி பட்டாசு தீப்பொறி சருமத்தில் பட்டால் என்ன செய்வது? மருத்துவர் கூறும் முதலுதவி வழிகள்! -
குண்டூர் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 08, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் - உங்க ராசி என்ன
தீபாவளி பலகாரங்களை ஒரு பிடி பிடித்துவிட்டீர்களா? தீபாவளிக்குப் பிறகு குடிக்க வேண்டிய 5 பானங்கள் இதோ!
Post Diwali Detox: தீபாவளி பண்டிகையில் பட்டாசுகளுக்கு அடுத்தபடியாக விதவிதமான பலகாரங்களை ரசித்து ருசித்து சாப்பிட்டிருப்போம். சொல்லப்போனால் இந்நாளில் பலர் தங்களின் டயட்டுகளுக்கு லீவு விட்டு, உணவுக் கட்டுப்பாட்டை மறந்து அதிகமாகச் சாப்பிடுவதும், வழக்கத்தைவிட அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதும் இயல்பான ஒன்றாகிவிடுகிறது.
ஆனால், தீபாவளி முடிந்த பிறகு வயிறு உப்புசம், செரிமானக் கோளாறு, மிகுந்த உடல் சோர்வு மற்றும் உடல் கனமாக இருப்பது போன்ற உணர்வுகள் சிலருக்கு ஏற்படலாம். இதனால், மீண்டும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும்.

இதற்காக கடுமையான டயட்டை பின்பற்றவோ, உணவுகளை தவிர்க்கவோ வேண்டிய அவசியமில்லை. மாறாக போதுமான நீரை குடிப்பது, நார்ச்சத்துள்ள உணவுகளை உண்பது, செரிமானத்திற்கு உதவும் ஆரோக்கியமான பானங்களை தேர்ந்தெடுத்து குடிப்பது நல்லது.
அதுவும் தீபாவளி பலகாரங்களால் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி, உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கி புத்துணர்ச்சியாக உணர வைக்கும் பானங்களை வீட்டிலேயே தயாரித்து குடிப்பது இன்னும் நல்லது. இப்போது தீபாவளிக்கு பின் உடலை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும் சில இயற்கை பானங்களைக் காண்போம்.
1. எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் நீர்
* இந்த பானம் தயாரிப்பதற்கு சில எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காயை துண்டுகளை எடுத்து, 1 ஜாடி நீரில் சேர்த்து, அத்துடன் சிறிது புதினா இலைகளை சேர்த்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் 1 மணிநேரம் கழித்து அந்த நீரை நாள் முழுவதும் குடிக்க வேண்டும்.
* இந்த நீர் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்வதோடு, செரிமானத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்ளும். முக்கியமாக இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், கொழுப்புக்களைக் கரைக்க மற்றும் நச்சுக்களை நீக்க உதவும்.
2. இஞ்சி-எலுமிச்சை-தேன் நீர்
* இந்த பானம் தயாரிப்பதற்கு ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி, அதில் 1/2 டீஸ்பூன் துருவிய இஞ்சியை சேர்த்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு அதை வடிகட்டி, அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும்.
* இந்த நீரை காபி, டீ-க்கு பதிலாக குடித்து வர, உடல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
3. மஞ்சள் நீர்
* இந்த பானம் தயாரிப்பதற்கு ஒரு கப் நீரில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குறைவான தீயில் 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
* இந்த பானம் கல்லீரலை சுத்தம் செய்ய உதவுவதோடு, செரிமானத்தை மேம்படுத்தும், நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும்.
4. எலுமிச்சை புதினா க்ரீன் டீ
* இந்த பானம் தயாரிப்பதற்கு 1 கப் க்ரீன் டீயை தயாரித்து, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது புதினா இலைகளை சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அந்த பானத்தை வடிகட்டி குடிக்க வேண்டும்.
* இந்த டீளை காபி, டீ-க்கு பதிலாக குடித்து வர உடல் சுத்தமாக இருக்கும்.
5. நெல்லிக்காய் மற்றும் கற்றாழை ஜூஸ்
* இந்த பானம் தயாரிப்பதற்கு 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து, ஒரு டம்ளர் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.
* இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து குடித்து வரும் போது, சருமம் பொலிவாக இருப்பதோடு, செரிமானமும் சீராக இருக்கும் மற்றும் உடலும் நச்சுக்களின்றி சுத்தமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

