Latest Updates
-
கையேந்தி பவன் வடகறி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. இட்லிக்கு அள்ளும்.. -
நவம்பர் 09, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப கவனமா இருக்கணும் - இல்லனா கஷ்டப்பட வேண்டியிருக்கும் -
Diwali 2026: பட்டாசுப் பொறிகள் கண்களில் பட்டால் இந்தத் தவறுகளைச் செய்யாதீர்கள்! கண் மருத்துவர் எச்சரிக்கை! -
Diwali 2026: தீபாவளி பட்டாசு தீப்பொறி சருமத்தில் பட்டால் என்ன செய்வது? மருத்துவர் கூறும் முதலுதவி வழிகள்! -
குண்டூர் சிக்கன் ரோஸ்ட் ரெசிபி - இந்த மாதிரி சிக்கனை ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி ஸ்பெஷல் பாய்வீட்டு மட்டன் பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 08, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு அதிசயங்கள் நடக்கும் நாளாக இருக்குமாம் -
சுக்கிரன் கன்னி ராசிக்குள் நுழைந்திருப்பதால் இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுதாம் - உங்க ராசி என்ன -
தீபாவளிக்கு இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
Skin Care: தக்காளி எப்படி உங்கள் சருமத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும் தெரியுமா?
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 7 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit In Scorpio On 16 November 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் கௌரவம், மதிப்பு, தலைமைத்துவம், அரசு வேலை, ஆன்மா, தந்தை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அப்படி சூரியனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். இந்த சூரியன் ஒருவரது ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்தால், அந்நபர் தொழிலில் நல்ல உயரத்தை அடைவார்கள்.

தற்போது சூரியன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் நவம்பர் 16 ஆம் தேதி சூரியன் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் டிசம்பர் 16 ஆம் தேதி வரை இருந்து, பின் தனுசு ராசிக்குள் நுழைவார். இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார்.
ஜோதிடத்தின் படி, சூரியனும், செவ்வாயும் நட்பு கிரகங்களாக கருதப்படுகின்றன. எனவே இந்த சூரிய பெயர்ச்சி தைரியம், ஆற்றல், தன்னம்பிக்கை ஆகியவற்றை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. இப்போது நவம்பர் மாத சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியை காணவுள்ளனர் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். மற்றும் நீண்ட கால கடின உழைப்புக்கான பலனும் கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இமனால் இந்த ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் சாதகமாக இருக்கும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதியும், செல்வமும் அதிகரிக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. முக்கியமாக குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். மேலும் உங்களின் கடின உழைப்பு உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். தொழிலதிபர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்பால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பெரிய மாற்றம் ஏற்படலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். மேலும் உங்களின் அந்தஸ்தும், கௌரவமும் உயரும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். எனவே இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் கல்வி ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். மாணவர்களுக்கு இந்த பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த சூரிய பெயர்ச்சியால் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளன. புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




