Latest Updates
-
Skin Care: தக்காளி எப்படி உங்கள் சருமத்தை கண்ணாடி போல ஜொலிக்க வைக்கும் தெரியுமா? -
வார ராசிபலன் (08 November 2026-14 November 2026)- இந்த வாரம் உங்க ராசி எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கேரளா ஸ்டைல் மனோகரம் முறுக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இனிப்பா சூப்பரா இருக்கும் -
Happy Diwali 2026: இந்தியா தவிர தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் நாடுகள் என்னென்ன தெரியுமா? -
தீபாவளி ஸ்பெஷல் கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - செமயா இருக்கும் -
இந்தியாவின் 'மாந்திரீக பூமி' என்று அழைக்கப்படும் கிராமம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோதுமை ரவா இட்லியும், தக்காளி கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 14 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
சுக்கிரதாதித்ய யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
தீபாவளிக்கு இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
Pollachi Chicken Biryani Recipe in Tamil: இந்த தீபாவளிக்கு பிரியாணி செய்யப் போறீங்களா? அப்படினா வழக்கமான பிரியாணி செய்யாம இந்த பொள்ளாச்சி ஸ்டைல் பிரியாணியை செஞ்சு பாருங்க. நீங்கள் பிரியாணி பிரியர் என்றால் இந்த ஸ்டைல் பிரியாணியை ஒருமுறையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் இது வழக்கமான பிரியாணியிலிருந்து முற்றிலும் வித்தியாசமான சுவையில் இருக்கும்.

இந்த பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். முக்கியமாக இதை பேச்சுலர்கள் கூட எளிதில் முயற்சிக்கலாம். அந்த அளவில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.
உங்களுக்கு பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 15 கிராம் இலவங்கப்பட்டை
- 6 கிராம்பு
- 1 அன்னாசிப்பூ
- 1/2 ஸ்பூன் கல்பாசி
- 3 ஏலக்காய்
- 1 ஸ்பூன் சோம்பு
- 1 ஸ்பூன் மிளகு
மசாலா அரைக்கத் தேவையானவை:
- 100 கிராம் சின்ன வெங்காயம்
- 50 கிராம் பூண்டு
- 50 கிராம் இஞ்சி
- 25 கிராம் பச்சை மிளகாய்
பிரியாணி செய்யத் தேவையானவை:
- 2 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 3 ஸ்பூன் நெய்
- 2 நறுக்கிய பெரிய வெங்காயம்
- 2 அரைத்த தக்காளி
- 25 கிராம் புதினா இலைகள், நறுக்கியது
- 25 கிராம் கொத்தமல்லி இலைகள், நறுக்கியது
- 1 கப் தயிர்
- தேவையான அளவு உப்பு
- ஒன்றரை கப் தேங்காய்ப்பால்
- அரை எலுமிச்சை பழத்தின் சாறு
- 500 கிராம் சீரக சம்பா அரிசி
- 500 கிராம் சிக்கன் (எலும்புடன் கூடியது)
- தேவையான அளவு தண்ணீர்
செய்முறை:
- பிரியாணி செய்யத் தொடங்குவதற்கு முன் சீரக சம்பா அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் மசாலா பொடி அரைப்பதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
- அதே மிக்சி ஜாரில் மசாலா விழுது அரைக்கத் தேவையான அணைத்துப் பொருட்களையும் சேர்த்து சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அடி கனமான ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் கடலை எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
- பின்னர் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தைச் சேர்த்து, மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- தயார் செய்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் வதக்கவும். மசாலாவிலிருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
- மசாலா பச்சை வாசனை போன பிறகு, அரைத்த மசாலாப் பொடியைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- தக்காளி பழங்களை மிக்சியில் போட்டு, கரகரப்பான விழுதாக அரைத்து, அதை வாணலியில் சேர்த்து, ஒரு நிமிடம் வேகவிடவும்.
- தக்காளி வெந்ததும் கொத்தமல்லி இலைகள் மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, தயிர் சேர்த்து மீண்டும் நன்றாகக் கலக்கவும்.
- பின்னர் சிக்கனைச் சேர்த்து நன்கு கிளறவும். இந்த பிரியாணிக்கு எலும்புடன் கூடிய சிக்கனைப் பயன்படுத்துவது நல்லது. அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்கு கிளறவும்.
- தேவையான அளவு உப்பு சேர்க்கவும். குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். இந்த நேரத்தில் சிக்கன் வெந்திருக்கும்.
- இந்த நிலையில், தேங்காய்ப்பால், எலுமிச்சைச் சாறு மற்றும் கூடுதலாக அரை லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்க்கவும். கலவை நன்கு கொதிக்கட்டும்.
- அனைத்தும் கொதிக்கத் தொடங்கியதும், ஊறவைத்துத் தண்ணீர் வடிகட்டிய அரிசியைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். மீண்டும் கொதிக்க விடவும். பிறகு, பாத்திரத்தை மூடி வைக்கவும்.
- 15 நிமிடம் அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்து 20 நிமிடம் தம் போட்டு வைக்கவும்.
- தம்மிலிருந்து இறக்கியதும் 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால் கமகமக்கும் பொள்ளாச்சி ஸ்டைல் சிக்கன் பிரியாணி ரெடி!



Click it and Unblock the Notifications
