Latest Updates
-
தீபாவளி ஸ்பெஷல் கர்நாடகா ஸ்டைல் நாட்டுக்கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - செமயா இருக்கும் -
இந்தியாவின் 'மாந்திரீக பூமி' என்று அழைக்கப்படும் கிராமம் எது தெரியுமா? எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
கோதுமை ரவா இட்லியும், தக்காளி கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 07, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 14 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
சுக்கிரதாதித்ய யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க உதடுகள் கருப்பா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
200 கிராம் பன்னீர் இருந்தா இந்த தாபா ஸ்டைல் பன்னீர் புர்ஜி கிரேவியை செய்யுங்க - டக்கரா இருக்கும் -
1.11 லட்சத்திற்கு விற்கப்படும் இந்தியாவின் காஸ்ட்லியான தீபாவளி ஸ்வீட் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
தீபாவளிக்கு 15 நிமிடத்தில் அதிரசம் செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
Happy Diwali 2026: இந்தியா தவிர தீபாவளியை சிறப்பாக கொண்டாடும் நாடுகள் என்னென்ன தெரியுமா?
Diwali 2026: இந்தியாவின் மிகவும் முக்கியமான மற்றும் கொண்டாட்டங்கள் நிறைந்த பண்டிகையான தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. இந்திய மக்கள் அனைவரும் தீபாவளியை கொண்டாட தயாராகி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் தீபாவளி கொண்டாடுகிறோம் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். தீபாவளி என்பது மரபுகளும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு கொண்டாட்டம். இது எல்லைகளைக் கடந்து, உலகளாவிய கொண்டாட்டமாக உருவெடுத்துள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் தீபாவளி எவ்வாறு கொண்டாடப்படுகிறது என்பதையும், ஒவ்வொரு நாடும் அதில் எப்படித் தங்களுக்குரிய அழகான அம்சங்களைச் சேர்க்கிறது என்பதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
நேபாளம்
நேபாளத்தில் 'திஹார்' என்று அழைக்கப்படும் தீபாவளி, அந்நாட்டின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டு, திஹார் பண்டிகையின் போது வண்ணமயமான அலங்காரங்கள், விளக்குகள் மற்றும் வீடுகளிலும் தெருக்களிலும் வரையப்படும் அழகிய ரங்கோலி கோலங்களால் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறது. நேபாளத்தில் திஹார் பண்டிகையை தனித்துவமாக்கும் அம்சம் என்னவென்றால், நாய்கள், பசுக்கள் மற்றும் காகங்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு அளிக்கப்படும் ஆழ்ந்த மரியாதையே ஆகும். இந்த நாளில் விலங்குகள் அலங்கரிக்கப்பட்டு உணவூட்டப்படுகிறது.
சிங்கப்பூர்
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சிங்கப்பூரில் தீபாவளி முக்கியமான ஒரு பண்டிகையாகும். தீபாவளி சமயத்தில் சிங்கப்பூரின் 'லிட்டில் இந்தியா' பகுதி, வண்ணமயமான விளக்குகள் மற்றும் அலங்காரங்களால் சூழப்பட்டு, கண்களைக் கவரும் ஒரு அற்புதமான இடமாக மாறுகிறது. இந்த நேரத்தில் அங்கு சென்றால், பாரம்பரிய இந்தியச் சடங்குகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், விதவிதமான இந்திய இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளைச் சுவைக்கலாம்.
மலேசியா
மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் வசிப்பதால், அங்கு இந்தப் பண்டிகை தீபாவளி என்றே பரவலாக அறியப்படுகிறது. மலேசியாவில் ஒரு பொது விடுமுறையான இந்த நாளில், நாடு முழுவதும், குறிப்பாக அதன் கலாச்சாரத் தலைநகரான கோலாலம்பூரில், கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. பிரிக்ஃபீல்ட்ஸ் அதன் பிரம்மாண்டமான தீபாவளி கொண்டாட்டங்களுக்காகப் பெயர் பெற்றது.
இங்கிலாந்து
இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் தீபாவளி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதில் லெய்செஸ்டர் நகரம் மிகவும் பிரபலமான இடங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நகரத்தில் பிரம்மாண்டமான தீபாவளி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் கண்கவர் தீபாவளி விளக்குகளை ஒளிரச் செய்யும் விழா, கலை நிகழ்ச்சிகள் மற்றும் 'தீபாவளி கிராமம்' போன்றவை இடம்பெறுகின்றன. சொல்லப்போனால் தீபாவளியின் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஏதோ ஒரு வகையில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன, அங்கு தீபாவளி மெல்ல மெல்ல ஒரு தேசிய அளவிலான கொண்டாட்டமாக மாறி வருகிறது.
தாய்லாந்து
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் இந்திய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு தீபாவளி பண்டிகையானது கலாச்சார நிகழ்ச்சிகள், நடன நிகழ்வுகள் மற்றும் அலங்காரங்களுடன் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீபாவளி சமயத்தில் நீங்கள் பேங்காக் நகரில் இருந்தால், 'தீபாவளி குரூஸ்' (Diwali Cruise) பயணம் முக்கியமானது, இந்தப் படகுப் பயணத்தில் உற்சாகமான இசை மற்றும் சுவையான உணவுகள் இடம்பெறும்.
தென் ஆப்பிரிக்கா
தென்னாப்பிரிக்காவில், குறிப்பாக இந்திய வம்சாவளியினர் பெருமளவில் வசிக்கும் டர்பன் நகரில், தீபாவளி ஒரு முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்நகரில் தீபாவளியை முன்னிட்டு கலாச்சார நிகழ்வுகள், இசை, பாரம்பரிய இந்திய உணவுகள் மற்றும் அகல் விளக்குகளை ஏற்றி வைத்தல் போன்ற கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்தோனேசியா
இந்தோனேசியாவில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகிறார்கள். பாலி தீவில், பாரம்பரிய பாலி நாட்டுப்புற நம்பிக்கைகளும் இந்து மதக் கோட்பாடுகளும் இணைந்து ஒரு தனித்துவமான கலவையை உருவாக்கியுள்ளன. இதன் விளைவாக, அங்கு இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்; மேலும், அந்தத் தீவில் எண்ணற்ற கோயில்களும் மத சடங்குகளும் காணப்படுகின்றன. இந்துக்களின் பண்டிகையான தீபாவளி, மிகுந்த மரியாதையுடன் கொண்டாடப்படுகிறது; இது இந்து மதத்திற்கும் பாலி கலாச்சாரத்திற்கும் இடையிலான ஆழமான பிணைப்பை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்கா
தீபாவளி கடல்களைக் கடந்து அமெரிக்காவின் பரபரப்பான வீதிகளையும் வந்தடைந்துள்ளது. நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ மற்றும் ஹூஸ்டன் போன்ற முக்கிய நகரங்களில், கண்கவர் அணிவகுப்புகள், பிரமிக்க வைக்கும் பட்டாசுகள், மற்றும் பாரம்பரிய இந்திய உணவுகள், உடைகள், அலங்காரப் பொருட்களைக் கொண்ட கண்காட்சிகளுடன் தீபாவளி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் சமூக மையங்களிலும் இந்து ஆலயங்களிலும் கலாச்சார நிகழ்ச்சிகள், பிரார்த்தனைகள் மற்றும் விருந்துகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.



Click it and Unblock the Notifications

