உங்க உதடுகள் கருப்பா இருக்குதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..

Dark Lips Remedies In Tamil: நமது முக அழகை மேம்படுத்தி காட்டுவதில் உதடுகளும் முக்கிய பங்கை வகிக்கின்றன. உதடுகள் மென்மையாகவும், லேசான பிங்க் நிறத்திலும் இருந்தால், அது அந்த முகத்தின் அழகையே மேலும் அதிகரித்து காட்டும். ஆனால் சிலருக்கு இயற்கையாகவே உதடுகள் சற்று கருமையாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு அதிகப்படியான வெயில், புகைப்பழக்கம், உதட்டு வறட்சி, அடிக்கடி உதடுகளில் எச்சில் வைப்பது மற்றும் சில அழகு சாதன பொருட்களால் ஏற்படும் அழற்சியால் உதடுகள் பொலிவிழந்து, சற்று கருமையாக காணப்படலாம். இப்படி கருமையான உதடுகளை அழகாக காட்டுவதற்கு பல பெண்கள் லிப்ஸ்டிக் பயன்படுத்துகிறார்கள்.

5 DIY Ways To Treat Dark Lips At Home For Pink Lips Naturally

இருப்பினும் கருப்பாக இருக்கும் உதடுகளுக்கு போதுமான பராமரிப்பு கொடுப்பதன் மூலம், உதடுகளின் பொலிவை மேம்படுத்தலாம். அதுவும் வீட்டிலேயே எளிதில் கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுத்தால், உதடுகளின் வறட்சி குறைந்து, ஈரப்பதத்துடன் இருக்கும். என்ன தான் உதடுகளுக்கு பராமரிப்பை கொடுத்தாலும், வெளியே வெயிலில் செல்லும் போது உதடுகளுக்கு ஏற்ற SPF கொண்ட லிப் பாம் பயன்படுத்துவதும் முக்கியம். கீழே கருமையான உதடுகளின் பொலிவை மேம்படுத்த உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. எலுமிச்சை மற்றும் தேன்

* இதற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேனை எடுத்துக் கொண்டு, அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* மறுநாள் காலையில் உதடுகளை மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
* ஒருவேளை உதடுகளில் எரிச்சலை சந்தித்தால், எலுமிச்சையை சேர்க்காமல், வெறும் தேனை மட்டும் பயன்படுத்துங்கள்.

2. பீட்ரூட் பேக்

* இதற்கு பீட்ரூட்டை துருவி, அதன் சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை உதடுகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் கழுவ வேண்டும்.
* இந்த பீட்ரூட் பேக்கை அடிக்கடி பயன்படுத்தும் போது உதடுகள் பிங்க் நிறத்தில் மாறும்.

3. ரோஜாப்பூ பேக்

* இதற்கு ரோஜாப்பூ இதழ்களை பாலில் சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

4. மாதுளை மாஸ்க்

* இந்த மாஸ்க்கிற்கு மாதுளை விதைகளை அரைத்து, அத்துடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை உதடுகளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி கழுவ வேண்டும்.
* இப்படி அடிக்கடி உதடுகளுக்கு மாஸ்க் போடும் போது உதடுகள் பிங்க் நிறத்தில் மாறும்.

5. கற்றாழை

* கற்றாழை ஜெல்லை தினமும் இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவ வேண்டும்.
* மறுநாள் காலையில் உதடுகளை கழுவ வேண்டும்.
* இப்படி தினமும் பயன்படுத்தி வரும் போது, உதடுகளில் உள்ள கருமை மறைவதைக் காணலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, November 6, 2026, 23:09 [IST]
Desktop Bottom Promotion