Latest Updates
-
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி பலகாரங்களால் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க.. -
தாஜ் மஹால் கட்டப்பட்ட நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் தெரியுமா? அவர் ஏன் நிலத்தை கொடுத்தார் தெரியுமா? -
தந்தேராஸில் உருவாகியுள்ள 2 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்! -
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
தீபாவளிக்கு பின் நிகழும் சுக்கிர பெயர்ச்சியால் உச்சத்தைத் தொடப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு இப்படி மசாலா அரைச்சு மட்டன் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
1/4 கப் இஞ்சியும், தேங்காயும் வைச்சு இந்த வித்தியாசமான சட்னி அரைச்சு பாருங்க -இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும்
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும்
Diwali Special Mutton Curry Recipe in Tamil: வந்தாலே பெரும்பாலான மக்களின் வீடுகளில் காலையிலேயே மட்டன் அல்லது நாட்டுக்கோழி குழம்பு கொதிக்கும். இந்த வருடம் தீபாவளிக்கு உங்கள் வீட்டில் மட்டன் கட்டாயம் எடுப்பீர்களா? அப்படி மட்டன் எடுத்தால், அதை எப்போதும் ஒரே சுவையில் தான் குழம்பு செய்வீர்களா? அப்படியானால் இந்த தீபாவளிக்கு மட்டன் எடுத்தால், அந்த மட்டனை இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்கள். இந்த மட்டன் குழம்பு இட்லி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

மேலும் இந்த ஸ்டைலில் மட்டன் குழம்பை உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், பின் எப்போதும் இந்த சுவையில் தான் குழம்பு செய்ய சொல்வார்கள். அந்த அளவில் ருசி பிரமாதமாக இருக்கும். உங்கள் தீபாவளியை கூடுதல் சுவையானதாக மாற்ற இந்த ஸ்டைலில் மட்டன் குழம்பை செஞ்சு பாருங்க. இந்த குழம்பு சுவையானதாக இருப்பதுடன் இதை செய்வதும் மிகவும் எளிதானதாகும். இதை ஈஸியாக குக்கரிலேயே செய்து விடலாம்.
உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் மட்டன் குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்:
- ஆட்டிறைச்சி - ½ கிலோ
- வெங்காயம் - 2
- தக்காளி - 2
- மிளகாய் தூள் - ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- மிளகுத் தூள் - 1 டீ ஸ்பூன்
- மல்லித் தூள் - 2 டீ ஸ்பூன்
- மட்டன் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்
- மிளகுத் தூள் - ¼ டீ ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 டீ ஸ்பூன்
- கருவேப்பிலை - 3 கொத்து
- கொத்தமல்லி இலைகள் - ஒரு கைப்பிடி
- உப்பு - தேவையான அளவு
அரைக்க:
- நல்லெண்ணெய் - 2 டீ ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 2 இன்ச்
- கிராம்பு - 6
- சீரகம் - 1 டீ ஸ்பூன்
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- பூண்டு - 5 அல்லது 6 பல்
- இஞ்சி - 2 இன்ச்
- சின்ன வெங்காயம் - 15 அல்லது 20
- தேங்காய் - ¼ மூடி
- கருவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
- ஆட்டிறைச்சியை ஒரு பாத்திரத்தில் சேர்த்து இரண்டு முறை அலசி விட்டு, பின் கடைசியாக சிறிது மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து அலசி சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
- வெங்காயம், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து, வெங்காயத்தின் மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற புஞ்சையை தண்ணீரில் சுத்தமாக கழுவி விட்டு, பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும்.
- நன்கு பழுத்த தக்காளியை காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை மண் இல்லாமல் அலசி தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை மண் இல்லாமல் அலசி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காயை உங்கள் விருப்பப்படி துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும். பின் அதனுடன் பட்டை, கிராம்பு, சீரகம், சோம்பு, தோல் உரித்து வைத்த சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கி வைத்த இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
- சின்ன வெங்காயம் வதங்கி கண்ணாடி பதம் வரும் வரை நன்கு வதக்கவும். பின் அதனுடன் துருவி வைத்த தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து ஆற விடவும்.
- நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
- பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து காய விடவும். அதனுடன் நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயத்தை அதிகமாக சேர்த்தால் குழம்பிற்கு நல்ல அடர்த்தியை கொடுக்கும். அதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வேக விடவும்.
- பின் அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் மற்றும் மட்டன் மசாலா தூள் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும்.
- அதனுடன் மட்டனை சேர்த்து கிளறி சில நிமிடங்களுக்கு வேக விட்டு, பின் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 20 நிமிடங்கள் வேக விடவும். விசில் எத்தனை வருகிறது என கணக்கில் கொள்ள வேண்டாம்.
- பின் குக்கரை பிரஷர் அடங்கியதும் திறந்து ஆட்டிறைச்சி வெந்து மென்மையாகி விட்டதா என பார்க்கவும். இல்லைஎன்றால் மீண்டும் சிறிது நேரம் வேக விடவும்.
- பின் அடுப்பில் வைத்து கருவேப்பிலை மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் சுவையான மட்டன் குழம்பு ரெடி! இந்த மட்டன் குழம்பு இட்லி, தோசை, அல்லது சாதத்துடன் பரிமாற அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
