தந்தேராஸில் உருவாகியுள்ள 2 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்!

Dhanteras 2026: தீபாவளி பண்டிகையின் முதல் நாளில் கொண்டாடப்படுவது தான் தந்தேராஸ். இந்த தந்தேராஸ் நாளானது அட்சய திருதியை போன்றே மங்களகரமான நாளாகும். இந்த ஆண்டின் தந்தேராஸ் நவம்பர் 06 ஆம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது. ஜோதிட ரீதியாக, இந்த தந்தேராஸ் நாளானது சற்று சிறப்பானது. ஏனெனில் இந்நாளில் இரண்டு மங்களகரமான பஞ்சமகா புருஷ ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.

Dhanteras 2026 Rare 2 Rajyogas Forming Together Will Bring Luck To These Zodiac Signs

அதுவும் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசியில் இருப்பதால் மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. மேலும் இந்த துலாம் ராசியில் சுக்கிரன், புத்திகாரகனான புதனுடன் சேர்ந்து லட்சுமி நாராயண ராஜயோகமும் உருவாகியுள்ளது.

செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவிக்குரிய வெள்ளிக்கிழமையில் தந்தேராஸ் வந்திருப்பதோடு, இந்நாளில் இரண்டு அரிய ராஜயோகங்கள் ஒன்றிணைந்திருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு இந்த தந்தேராஸ் நாளானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது. இப்போது தந்தேராஸ் நாளில் உருவாகியிருக்கும் இரண்டு ராஜயோகங்களால் எந்த ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதை காண்போம்.

ரிஷபம்

தந்தேராஸ் நாளில் உருவாகியிருக்கும் இரண்டு ராஜயோகங்களால் ரிஷப ராசிக்காரர்களின் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு போனஸ் கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சொத்துக்கள் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

கன்னி

தந்தேராஸ் நாளில் உருவாகியிருக்கும் இரண்டு ராஜயோகங்களால் கன்னி ராசிக்காரர்களுக்கு சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம்

தந்தேராஸ் நாளில் உருவாகியிருக்கும் இரண்டு ராஜயோகங்களால் துலும் ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலருக்கு எதிர்பார்த்த இட மாற்றம் கிடைக்கலாம். பண பரிவர்த்தனைகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

மகரம்

தந்தேராஸ் நாளில் உருவாகியிருக்கும் இரண்டு ராஜயோகங்களால் மகர ராசிக்காரர்களுக்கு பொறுமையும், கடின உழைப்பும் நல்ல பலனைத் தரும். வேலை அல்லது வணிகத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்பு கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். எதிர்பாராத நல்ல செய்திகளை பெறுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கும்பம்

தந்தேராஸ் நாளில் உருவாகியிருக்கும் இரண்டு ராஜயோகங்களால் கும்ப ராசிக்காரர்கள் ஏராளமான நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சுக்கிரனின் அருளால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். அப்படி கிடைக்கும் பணத்தை சரியான இடத்தில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 6, 2026, 10:36 [IST]
Desktop Bottom Promotion