Latest Updates
-
நாளைக்கு மறந்தும் இந்த பொருட்களை யாருக்கும் கொடுக்காதீங்க.. இல்ல வறுமை வாட்டி எடுத்துடும்! -
தீபாவளிக்கு பின் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரண களமா இருக்கப்போகுது.. -
உங்க குளிர்சாதனப் பெட்டியில் கூலிங் பிரச்சினை இருக்கா? அப்ப ஒரு பேப்பரை வைச்சு ஈஸியா இப்படி கண்டுபிடிங்க -
பாஸ்போர்ட் இல்லாமல் உலகின் எந்த நாட்டுக்கும் பயணிக்கும் அந்தஸ்து உள்ள சக்திவாய்ந்த 3 பேர் யார் தெரியுமா? -
2 கப் ஜவ்வரிசி இருந்தா.. தீபாவளிக்கு 10 நிமிஷத்துல ஸ்வீட், கார மிக்சர் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
3/4 கப் உளுந்து இருந்தா இந்த தால் மகாராணியை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
தீபாவளி பட்டாசு புகையால் கண் எரிச்சல், சரும அலர்ஜி, மூச்சுத்திணறலா? பாதுகாப்பாக இருக்க டாக்டர் கூறும் டிப்ஸ்! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. உங்க ராசி என்ன? -
செக் எழுதும்போது ஏன் தொகைக்கு பக்கத்தில் 'ONLY' என்று எழுதுகிறோம் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
1 கப் பொட்டுக்கடலை இருந்தா தீபாவளிக்கு இந்த புது ஸ்வீட்டை செய்யுங்க - டேஸ்ட் அதிரிபுதிரியா இருக்கும்
Diwali Special Pottukadalai Halwa Recipe in Tamil: இந்தியாவின் கொண்டாட்டங்கள் நிறைந்த தீபாவளி பண்டிகை வரப்போகிறது. தீபாவளி என்றாலே பலகாரங்கள்தான். தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதவர்கள் கூட இருப்பார்கள், ஆனால் பலகாரங்கள் சாப்பிடாதவர்கள் இருக்க மாட்டார்கள். இந்த வருட தீபாவளிக்கு வழக்கமான இனிப்புகள் செய்யாமல் ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த வித்தியாசமான அல்வாவை செஞ்சு பாருங்க.

வழக்கமான அல்வா செய்யாம உங்க வீட்டில் பொட்டுக்கடலை இருக்கா அப்படினா அதை வைச்சு வாயில் கரையும் ஒரு சுவையான அல்வாவை செய்யுங்க. இந்த அல்வாவை செய்வதற்கு மிகவும் குறைவான அளவிலான பொருட்கள் இருந்தாலே போதும். இந்த அல்வா உங்க தீபாவளியை கூடுதல் ஸ்பெஷலானதாக மாற்றும்.
உங்களுக்கு தீபாவளி ஸ்பெஷல் பொட்டுக்கடலை அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பொட்டுக்கடலை அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பொட்டுகடலை
- 2 டீஸ்பூன் நெய்
- 1½ கப் வெல்லம்
- 2 கப் தண்ணீர்
- 1 சிட்டிகை குங்குமப்பூ அல்லது கேசரி பவுடர்
- ½ ஸ்பூன் ஏலக்காய் தூள்
- 2 டீஸ்பூன் உடைத்த முந்திரி
செய்முறை:
- முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் 1 கப் பொட்டுக்கடலையைச் சேர்த்து, நைஸான பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள பொட்டுக்கடலை பொடியைச் சேர்த்து வறுக்கவும்.
- 3 முதல் 4 நிமிடங்கள் வரை அல்லது பொட்டுக்கடலை பொடியிலிருந்து வாசனை வரும் வரை வறுத்து, தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் 1½ கப் வெல்லம் மற்றும் 2 கப் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
- வெல்லம் முழுமையாகக் கரையும் வரை கிளறவும். இந்த வெல்லக் கரைசலை 1 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- தயார் செய்து வைத்துள்ள பொட்டுக்கடலை பொடியுடன் இந்த வெல்லக் கரைசலைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- கலவை நன்கு ஒன்று சேரும் வரை தொடர்ந்து கிளறவும்.
- ஒரு சிட்டிகை குங்குமப்பூ அல்லது கேசரி பவுடர் மற்றும் ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- கலவை கெட்டியாகி, பட்டுப் போன்ற பதத்திற்கு வரும் வரை தொடர்ந்து கிளறவும்.
- மேலும், ½ ஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் 2 ஸ்பூன் நெய் சேர்க்கவும்.
- அல்வா பாத்திரத்தில் இருந்து பிரியும் வரை நன்கு கிளறவும்.
- இப்போது 2 ஸ்பூன் உடைத்த முந்திரி சேர்த்து நன்கு கலக்கவும். ஆறியதும் அல்வா கெட்டியாகிவிடும்.
- அவ்வளவுதான், பொட்டுக்கடலை அல்வா ரெடி. இதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 3 நாட்கள் வரை சுவையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
