ராகி ரவா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Ragi Rava Upma With Coconut Chutney Recipe In Tamil: தினமும் காலையில் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? நீங்கள் உடல் எடையைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் ராகி மாவும், ரவையும் இருந்தால், அவற்றைக் கொண்டு உப்புமா செய்யுங்கள். இந்த ராகி ரவா உப்புமா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, சத்தானதும் கூட. இந்த உப்புமாவிற்கு தேங்காய் சட்னி அருமையாக இருக்கும். அதுவும் இந்த தேங்காய் சட்னியுடன் சிறிது மாங்காய் சேர்த்து அரைக்கும் போது, சட்னியின் சுவை பிரமாதமாக இருக்கும்.

Ragi Rava Upma With Coconut Chutney How To Make This Healthy Breakfast

உங்களுக்கு ராகி ரவா உப்புமாவையும், தேங்காய் சட்னியையும் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ராகி ரவா உப்புமா மற்றும் தேங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

உப்புமாவிற்கு...

* ரவை - 1 கப்
* ராகி மாவு - 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - 6 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது

சட்னிக்கு...

* துருவிய தேங்காய் - 1 கப்
* வேர்க்கடலை - 1 கைப்பிடி
* பூண்டு - 4 பல்
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பொட்டுக்கடலை - 1 கையளவு
* மாங்காய் - 4 துண்டு
* உப்பு - சுவைக்கேற்ப

சட்னி தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ரவை மற்றும் ராகி மாவை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயத்தை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 6 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்த ரவையை சேர்த்து கைவிடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* ரவையானது நீரை முழுமையாக உறிஞ்சியதும், கிளறுவதை நிறுத்திவிட்டு, தட்டு கொண்டு மூடி 2-3 நிமிடம் குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ராகி ரவா உப்புமா தயார்.
* அடுத்து மிக்சர் ஜாரில் தேங்காய், வேர்க்கடலை, பூண்டு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை, பொட்டுக்கடலை, மாங்காய் துண்டுகள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தால், தேங்காய் சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 5, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion