Latest Updates
-
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்! -
கேது கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா -
மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா? -
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Hair Care: கருகருனு நீளமான முடி வேணுமா? அப்ப தயிரை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க
Hair Care: எப்போதும் நாம் தலைமுடியை சீவும் போது, சீப்பில் அதிக அளவில் உதிர்ந்து வந்திருக்கும் முடியை பார்க்கும் போது, நமக்கு ஒரு விதமான மன அழுத்தமே ஏற்பட்டுவிடும். முடி கொட்டுவது பொதுவாக நம்மை கவலையடைய செய்ய கூடிய ஒரு விஷயம் தான். அதற்காக அதிகம் செலவு செய்து ஹேர் சீரம்கள், விலை உயர்ந்த ஷாம்பூ, மற்றும் கண்டிஷனரை வாங்கி பயன்படுத்துகிறோம். இன்னும் சிலர் பியூட்டி பார்லர் சென்று இரசாயன கலவைகள் நிறைந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதற்கு மாற்றாக அடர்த்தியான மற்றும் வேகமான கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த தீர்வு உங்கள் சமையலறையில் இருக்கும் ஒரு பொருள் தான்.

அது என்னவாக இருக்கும் என யோசித்து கொண்டிருக்கிறீர்களா? வெறும் உணவுப் பொருளாக மட்டுமின்றி, தலைமுடியை பராமரித்து சிறந்து மாற்றத்தை ஏற்படுத்த கூடிய அந்த பொருள் தயிர் தான். இறந்த செல்களை நீக்கி, பலவீனமான முடியின் வேர்க்கால்களை வலுப்படுத்துவதோடு, உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் புரதச்சத்துக்கள் உதவுகின்றன.
ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தேவையான மிகச்சிறந்த சூழலை உருவாக்கி, கூந்தலை பளபளக்க செய்யும் 5 வழிகளை இங்கு பார்க்கலாம்.
எலுமிச்சை
இயற்கையாகவே பொடுகை நீக்கும் பண்புகள் எலுமிச்சைக்கு உண்டு. தலைமுடியில் சேரும் அழுக்கு அல்லது பொடுகு போன்றவை மயிர்கால்களை அடைத்து முடியின் வளர்ச்சியை தடுக்க கூடியவை. அதனால் நமது தலையின் தோல் பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம்.
பொடுகிற்கு காரணமான பூஞ்சைகளை அழிக்கவும், தலையில் இருக்கும் அதீத எண்ணெய் பசையை நீக்கவும், எலுமிச்சை சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி உதவுகிறது. ஆனால் எலுமிச்சை சாறை நேரடியாக பயன்படுத்தினால், அது தலையில் வறட்சியை ஏற்படுத்தலாம். இதனுடன் தயிர் சேர்க்கும் போது, எலுமிச்சை சாறின் அமிலத்தன்மையால் சருமம் வறண்டு போகாமல் இருக்கும் சமநிலையை கொடுக்கிறது.
தேவையான பொருட்கள்:
தயிர் - ½ கப்
எலுமிச்சை பழம் - ½ பழம்
பயன்படுத்தும் முறை:
தயிர் மற்றும் எலுமிச்சை சாறை மிக்ஸி ஜாரில் சேர்த்து பல்ஸ் மோடில் அரைத்து கொள்ளவும். பின் தலையின் முடியின் வேர்க்கால்கள், முடியின் நுனி வரை என நன்கு தடவி ஊற விடவும். எலுமிச்சையால் சருமத்தில் எரிச்சல் ஏற்படாமல் இருக்க 15 முதல் 20 நிமிடங்கள் போதுமானதாக இருக்கும். பின் எப்போதும் உபயோகிக்கும் ஷாம்பூ கொண்டு தலையை அலசி விடவும்.
வெந்தயம்
வெந்தயம் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் பாரம்பரிய இயற்கை மூலப்பொருளாகும். இதில் இரும்புச்சத்து மற்றும் புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தலைமுடியின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், சேதமடைந்த முடியைச் சீரமைக்கவும் உதவுகின்றன.
மேலும், வெந்தயத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தலைமுடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகின்றன. இதனுடன் தயிர் சேர்த்துப் பயன்படுத்தும்போது, தலைமுடிக்கு ஈரப்பதம் கிடைப்பதுடன், முடி மென்மையாகவும் இருக்க உதவுகிறது. தொடர்ந்து சரியான முறையில் முடியைப் பராமரிப்பது தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
தேவையான பொருட்கள்:
- வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன்
- தயிர் - ½ கப்
பயன்படுத்தும் முறை:
வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் அரை கப் புதிய தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவையை தலையின் முடியின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவவும். 30 முதல் 45 நிமிடங்கள் வரை ஊறவிட்டு, பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசிவிடவும்.
கற்றாழை
கற்றாழையில் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. இவை உச்சந்தலையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், அரிப்பு மற்றும் எரிச்சலைக் குறைக்கவும் உதவுகின்றன. மேலும், உச்சந்தலையின் ஈரப்பதத்தைப் பராமரிக்கவும் கற்றாழை உதவுகிறது.
இதனுடன் தயிர் சேர்த்துப் பயன்படுத்தும்போது, தலைமுடிக்கு கூடுதல் ஈரப்பதம் கிடைக்கிறது. இதனால் தலையின் சரும பகுதி பாதிப்படையாமல் இருக்கும். ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உச்சந்தலையை முறையாகப் பராமரிப்பது மிகவும் அவசியம்.
தேவையான பொருட்கள்:
- கற்றாழை ஜெல் - ½ கப்
- தயிர் - ½ கப்
பயன்படுத்தும் முறை:
புதிய கற்றாழை ஜெல்லையும் தயிரையும் சம அளவில் எடுத்துக்கொள்ளவும். இவை இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் முடியைப் பிரித்து, இந்தக் கலவையை தலையின் முடியின் வேர்க்கால்கள் மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். மீதமுள்ள கலவையை முடியின் நுனி வரை தடவிக் கொள்ளவும். 40 நிமிடங்கள் வரை ஊறவிட்டு, பின்னர் எப்போதும் பயன்படுத்தும் ஷாம்பு கொண்டு தலையை நன்கு அலசிவிடவும்.
முட்டை
தலைமுடியின் முக்கிய கட்டமைப்புப் புரதமான கெரட்டின், முடியின் வலிமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அவசியமானது. முட்டையில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. இது தலைமுடியின் வெளிப்புறப் பராமரிப்பிற்கு உதவுகிறது.
தயிர் தலைமுடிக்கும் உச்சந்தலைக்கும் ஈரப்பதத்தை வழங்க உதவுகிறது. முட்டை மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்துப் பயன்படுத்தும்போது, வறண்ட தலைமுடியை மென்மையாகப் பராமரிக்கவும், முடி உடைவதைக் குறைக்கவும் உதவலாம். இதனால் தலைமுடியின் நீளத்தைப் பராமரிக்க முடியும்.
தேவையான பொருட்கள்:
- முட்டை - 1
- தயிர் - 3 தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
ஒரு முழு முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றவும். அதனுடன் மூன்று தேக்கரண்டி தயிர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் மிருதுவாகும் வரை நன்கு கலக்கவும் அல்லது மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். பின் இந்தக் கலவையை முடியின் வேர்க்கால்கள் முதல் முடியின் நுனி வரை சமமாகத் தடவி, 30 நிமிடங்கள் வரை ஊற விடவும். அதன் பிறகு குளிர்ந்த நீரால் தலைமுடியை நன்கு அலசவும். இறுதியாக, எப்போதும் பயன்படுத்தும் மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசிவிடவும்.



Click it and Unblock the Notifications

