Latest Updates
-
பட்டுப்போன்ற மென்மையான உதடுகள் வேண்டுமா? அப்ப இந்த லிப் மாஸ்க்கை தினமும் நைட் போடுங்க.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்! -
கேது கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா -
மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா? -
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்..
Diwali Special Bakery Style Maida Biscuit Recipe In Tamil: தீபாவளிக்கு உங்கள் வீட்டில் நிறைய பலகாரங்களை செய்வீர்களா? உங்கள் தீபாவளி பலகாரங்களின் பட்டியலில் பல புதுமையான பலகாரங்களை சேர்க்க நினைக்கிறீர்களா? அப்படியானால் பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்கள். முக்கியமாக இந்த பிஸ்கட்டை ஒருமுறை செய்தால் 1 மாதம் வரை வைத்து சாப்பிடலாம். அதோடு இந்த பிஸ்கட் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு இந்த பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சர்க்கரை பாகுவிற்கு..
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/3 கப்
* எண்ணெய் - 1/3 கப்
* ஏலக்காய் - 3 (பொடித்தது)
பிஸ்கட் மாவிற்கு..
* மைதா - 1 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* சர்க்கரை பாகு
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, உப்பு, தண்ணீர், எண்ணெய்
மற்றும் பொடித்த ஏலக்காய் சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரை நன்கு
கரைந்ததும், அதை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் சல்லடையை வைத்து, அதில் மைதா மாவை
சேர்த்து சலித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே சல்லடையில் 1 கப் கோதுமை மாவை சேர்த்து சலித்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு இரண்டு மாவும் ஒன்று சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து சர்க்கரை பாகுவை வடிகட்டி, அதை ஊற்றி மாவை நன்கு பூரி மாவு
பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* மாவை நன்கு பிசைந்த பின், அதன் மேல் சிறிது எண்ணெய் தடவி, மூடி
வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 30 நிமிடம் கழித்து மாவை நன்கு பிசைந்து, பூரி கட்டையால் சற்று
தடிமனாக தேய்த்து விட வேண்டும். முக்கியமாக மடித்துவிட்டு
மடித்துவிட்டு தேய்க்கும் போது, லேயர் லேயராக இருக்கும்.
* பின் கத்தியால் சிறு சிறு சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி ஓரளவு சூடானதும், வெட்டி வைத்துள்ள துண்டுகளை
சேர்த்து, குறைவான தீயில் வைத்து, பொன்னிறமாகும் வரை நன்கு பொரிய
விட்டு எடுத்தால், மைதா பிஸ்கட் தயார்.



Click it and Unblock the Notifications
