Latest Updates
-
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும -
ஹிமாலயன் வயகரா என்று அழைக்கப்படும் இந்த காளானின் விலை எவ்வளவுனு தெரிஞ்சா மயக்கமே வந்துரும்... -
சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 2 நாட்கள் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
1 கப் முருங்கைக்கீரையும், 1/2 கப் பொட்டுக்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 04, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Sankara Fish Benefits In Tamil: அசைவ உணவு பிரியர்களுக்கு மீனின் மீது தனி ஆசை இருக்கும். இந்த மீனில் பல வெரைட்டிகள் உள்ளன. ஆனால் அவற்றில் தமிழ்நாட்டில் சங்கரா மீன் மிகவும் பிரபலமானது மற்றும் விலை குறைவானதும் கூட. இந்த மீனை குழம்பு, வறுவல் என எப்படி சமைத்து சாப்பிட்டாலும் சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த சுவை ருசியானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களையும் கொண்டது.

ஆங்கிலத்தில் ரெட் ஸ்னாப்பர் (Red Snapper) என்று அழைக்கப்படும் சங்கரா மீன், புரோட்டீன் மற்றும் பல அத்தியாவசிய சத்துக்களைக் கொண்டது. முக்கியமாக இந்த மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், செலினியம், மக்னீசியம், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி, இந்த மீனில் பொட்டாசியமும் உள்ளது.
குறிப்பாக இந்த மீனில் கொழுப்புக்கள் குறைவு என்பதால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த தேர்வாகும். இப்படிப்பட்ட சங்கரா மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இப்போது காண்போம்.
1. இதய ஆரோக்கியம் மேம்படும்
சங்கரா மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளன. இந்த கொழுப்பு அமிலங்களின் காரணமாக, சங்கரா மீனை தொடர்ந்து உட்கொண்டால், அது இதய நோய், தமனித் தடிப்பு மற்றும் உயர் கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கக்கூடும் என்று அமெரிக்க இதய சங்கம் கூறுகிறது. எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், சங்கரா மீனை அடிக்கடி வாங்கி சாப்பிடுங்கள்.
2. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
சங்கரா மீனில் உடலுக்கு வேண்டிய செலினியத்தின் அளவில் சுமார் 70 சதவீதம் நிறைந்துள்ளது. இந்த செலினியம் உடலில் இரத்த வெள்ளை அனுக்களின் உற்பத்தியை அதிகரித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. எனவே உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், சங்கரா மீனை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள்.
3. மூளை ஆரோக்கியம் மேம்படும்
சங்கரா மீனில் வைட்டமின் ஏ, செலினியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் ஏராளமான உள்ளதால், இந்த மீன் மூளையின் ஆரோக்கியத்திற்கு சிறந்ததாக கருதப்படுகிறது. சங்கரா மீன் போன்ற மீன்களை உட்கொள்வது அறிவாற்றல் செயல்பாடுகளைத் தூண்டி, நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால், சங்கரா மீனை வாங்கி அடிக்கடி சமைத்து கொடுங்கள். இதனால் அவர்களின் நினைவாற்றலும், அறிவாற்றலும் சிறப்பாக இருக்கும்.
4. எடை இழப்புக்கு உதவும்
சங்கரா மீனில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், அது உடல் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சங்கரா மீனில் உள்ள பொட்டாசியமானது உடலின் மெட்டபாலிசத்திற்கு தேவையான நொதிகளை செயல்படுத்துகிறது. எப்போது ஒருவரது உடலில் போதுமான பொட்டாசியம் இல்லையோ, அது பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், எலும்புப்புரை மற்றும் சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும்.
5. தைராய்டு ஆரோக்கியம் மேம்படும்
சங்கரா மீனில் உள்ள செலினியம் தைராய்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இது தைராய்டு ஹார்மோன் தொகுப்பு மற்றும் செயல்பாட்டிற்குத் தேவையான ஒரு நுண்ணூட்டச்சத்து ஆகும். உடலின் மற்ற உறுப்புகளை விட தைராய்டில் செலினியத்தின் செறிவு அதிகமாக உள்ளது, மேலும் இது தைராய்டின் உகந்த செயல்பாட்டிற்குத் தேவைப்படுகிறது.
6. எலும்புகள் வலுவடையும்
சங்கரா மீனில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. இந்த பொட்டாசியம் ஆஸ்டியோபோரோசிஸை தடுக்கவும், எலும்பு தாது அடத்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. எனவே எலும்பு தொடர்பான பிரச்சனைகளை கொண்டவர்கள் சங்கரா மீனை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் போது, எலும்புகள் வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
