Latest Updates
-
1 கப் முருங்கைக்கீரையும், 1/2 கப் பொட்டுக்கடலையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 04, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
தீபாவளிக்கு பின் உதயமாகும் புதன்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது! -
சனிபகவானின் வக்ர இயக்கம் முடிவுக்கு வருவதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
1/2 கப் ரவை இருந்தா போதும்.. தீபாவளிக்கு சூப்பரான ஸ்வீட் செய்யலாம்.. என்னன்னு பாருங்க.. -
Skin Care: முகப்பரு இல்லாத கண்ணாடி மாதிரி சருமம் வேண்டுமா? அப்ப இந்த தானியங்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க -
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
எந்த காய்கறியும் தேவைப்படாத இந்த பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 2 நாட்கள் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
Moon Jupiter Ketu Forms Trigrahi Yog In Leo 2026: ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றுவதோடு, மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் நவம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே சிம்ம ராசியில் அற்புதமான யோகம் உருவாகியுள்ளது. அது தான் திரிகிரக யோகம். எப்போது ஒரு ராசியில் மூன்று கிரகங்கள் ஒன்றிணைந்து பயணிக்கிறதோ, அப்போது உருவாகக்கூடிய யோகம் தான் திரிகிரக யோகம். அதுவும் இந்த யோகம் நவம்பர் 03 ஆம் தேதி சிம்ம ராசியில் உருவாகிறது.

வேத நாட்காட்டியின் படி, மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் நவம்பர் 03 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். அப்போது சிம்ம ராசியில் குரு மற்றும் கேது இருப்பதால், சந்திரனும் நுழையும் போது மூன்று கிரகங்களின் சேர்க்கையின் காரணமாக திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அதுவும் அந்த ராசிக்காரர்கள் தொழில், நிதி நிலையில் நல்ல உயர்வையும், பல வெற்றிகளையும் காண்பார்கள். இப்போது சிம்ம ராசியில் உருவாகியுள்ள திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முக்கியமான வேலை வெற்றிகரமாக முடிப்பதால் மன திருப்தி கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் சாதகமாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் வேகமும், செயல்திறனும் மேம்படும். பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் வேலையை பாராட்டுவார்கள். தொழிலதிபர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வருவதற்கான வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலைகளில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு பெரிய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்ந்து, உறவுகள் வலுவடையும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால், எந்த ஒரு முடிவுகளையும் சரியாக எடுப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களால் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
