Latest Updates
-
எந்த காய்கறியும் இல்லாம இந்த எம்டி பாயாவை ஒருதடவை செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்ட்டகாசமா இருக்கும் -
Diwali 2026: தீபாவளி அன்று ஏன் 13 விளக்குகளை ஏற்ற வேண்டும்? அவற்றை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும்? -
உலகம் முழுக்க 108 ஏன் மிகவும் புனிதமான எண்ணாக கருதப்படுகிறது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
வாஸ்து படி வீட்டை பெருக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செய்யாதீங்க - இல்லனா வீட்டு அதிர்ஷ்டமே போயிரும் -
தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
18 மாதங்களுக்கு பின் ராகு மகர ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
அவரைக்காயை எப்பவும் பொரியல் செய்யாம.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
15 பல் பூண்டு இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் பூண்டு பப்புவை செய்யுங்க - சாதத்தில் ஊற்றி சாப்பிட அமிர்தமா இருக்கும -
அடிக்கடி நெஞ்செரிச்சல், அஜீரணமா? வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டும் உள்ளது? வேறு நிறத்தில் டயர் இருந்தால் என்ன நடக்கும் தெரியுமா?
தீபாவளி அன்று பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப தக்காளி வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
Diwali 2026 Skin Care Tips In Tamil: தீபாவளி வரப்போகிறது. தீபாவளி நெருங்கிவிட்டாலே புத்தாடைகள், அதற்கேற்ற ஆபரணங்களை வாங்குவதோடு, தங்களை அழகுப்படுத்திக் கொள்ளவும் தயாராகிவிடுவார்கள். ஏனெனில் தீபாவளி நாளில் நல்ல அழகான ஆடைகளை அணியும் போது, முகம் பொலிவாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று அனைவருமே நினைப்போம்.
ஆனால் வெயில், மாசு, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்றவற்றால் முகம் பொலிவிழந்து காணப்படலாம். இந்நிலையில் முகத்தை பொலிவாகவும், பளிச்சென்று மாற்றவும் அழகு நிலையங்களுக்கு சென்று ஃபேஸ் பேக், ஃபேஷியல் என்று பலர் நிறைய பணத்தை செலவழித்து சரும பராமரிப்பு கொடுப்பார்கள். ஆனால் சருமத்தின் பொலிவை மேம்படுத்த நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே பராமரிப்பு கொடுக்கலாம்.

அதுவும் தினசரி சமையலில் பயன்படுத்தும் தக்காளி சருமத்தில் மாயங்களை புரியும். ஏனெனில் தக்காளில் வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சருமத்திற்கு நல்ல பொலிவைத் தரும். அதுவும் தக்காளியுடன் குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து ஃபேஸ் பேக்குகளை போடும் போது, இன்னும் சிறப்பான பலன்கள் குறுகிய காலத்தில் கிடைக்கும். இப்போது தீபாவளிக்கு முன் பொலிவான சருமத்தைப் பெற தக்காளியை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.
1. தக்காளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தக்காளி சாற்றினை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தை பளபளவென்றும், பொலிவாகவும் மாற்றும்.
2. தக்காளி மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தக்காளி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள கருமையை போக்க பெரிதும் உதவி புரியும்.
3. தக்காளி ஐஸ் கட்டி மசாஜ்
* இதற்கு தக்காளியை அரைத்து சாறு எடுத்து, அதை ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஃப்ரீசரில் வைத்து உறைய வைக்க வேண்டும்.
* ஐஸ் கட்டி தயாரானதும், அதைக் கொண்டு முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
* இப்படி தினமும் ஒருமுறை இந்த தக்காளி ஐஸ் கட்டியைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, சருமத்தில் திறந்துள்ள சருமத்துளைகள் இறுக்கமடைந்து, முகம் இளமையாகவும் பொலிவோடும் காட்சியளிக்கும்.
4. தக்காளி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் தக்காளி ஜூஸ் மற்றும் எலுமிச்சை ஜூஸை சமஅளவில் எடுத்துக் கொண்டு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் பஞ்சுருண்டையால் அதை முகத்தில் தடவி 5-7 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்றது. வறண்ட சருமத்தினர் மற்றும் சென்சிடிவ் சருமத்தினர் இந்த ஃபேஸ் பேக்கை தவிர்க்க வேண்டும்.
5. தக்காளி மற்றும் முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் முல்தானி மெட்டி பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் தக்காளி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி, துடைத்த பின் மறக்காமல் மாய்ஸ்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
