தீபாவளியில் உருவாகும் 2 சக்திவாய்ந்த ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!

Diwali 2026: தீபாவளி பண்டிகை வரப்போகிறது. இந்த ஆண்டின் தீபாவளி நவம்பர் 08 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்த தீபாவளி பண்டிகை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த நாளில் கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும் அசுரர்களின் குருவான சுக்கிரனும் துலாம் ராசியில் ஒன்றிணைந்து சுக்ராதித்ய ராஜயோகத்தையும், அதே வேளையில் சூரியனும் புதனும் ஒன்றிணைந்து புதாதித்ய ராஜயோகத்தையும் உருவாக்குகின்றன.

Diwali 2026 Shukraditya Budhaditya Rajyog Brings Wealth And Prosperity To These Zodiac Signs

இப்படியான கிரகங்களின் நிலையால் உருவாகும் ராஜயோகங்களானது தீபாவளி நாளில் பல ஆண்டுகளுக்கு பின் உருவாகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் அந்த ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியையும், நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது தீபாவளி நாளில் உருவாகும் 2 ராஜயோகங்களால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு தீபாவளியானது மங்களகரமானதாக இருக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இக்காலத்தில் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். காதல் திருமணம் செய்து கொள்ள வாய்ப்புக்களும் உருவாகும். முக்கியமாக பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் உருவாகும் ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாள் கனவு நனவாகும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். பொறுப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். கூட்டு தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு தீபாவளியில் உருவாகும் ராஜயோகங்களால் மதிப்பும், மரியாதையும், வெற்றியும் குவியும். பணியிடத்தில் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு வாங்க வேண்டுமென்ற கனவு நனவாகும். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். மொத்தத்தில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காணக்கூடும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு தீபாவளி அதிர்ஷ்டமானதாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். திருமண வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும். தம்பதிகளிடைய அன்பும், பரஸ்பர நம்பிக்கையும் அதிகரிக்கும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். புதிய இலக்குகளை நிர்ணயித்து அதை நோக்கிய பயணத்தை தொடங்குவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இதன் மூலம் நிதி நிலைமை மேம்படும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, November 3, 2026, 16:25 [IST]
Desktop Bottom Promotion