Latest Updates
-
முருங்கைக்கீரை கோதுமை தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 03, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்கப்போகுதாம் -
சிம்ம ராசியில் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் வக்ர நிலையில் நட்சத்திரத்தை மாற்றுவதால் கோடிகளைக் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தீபாவளிக்கு மொறுமொறுன்னு பேக்கரி ஸ்டைல் தட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
உத்தர பிரதேச ஸ்டைல் தஹ்ரி புலாவ் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப டாக்ஸிக்கான காதலன், காதலியாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Dhanteras 2026: தந்தேராஸ் என்றால் என்ன? அந்நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது? -
இந்த தீபாவளிக்கு வேர்க்கடலையை வைச்சு இந்த வித்தியாசமான இனிப்பை செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
வக்ர சுக்கிரன் இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகிறார்.. உங்க ராசி இதுல இருக்கா?
Retrograde Venus In Virgo 2026: நவகிரகங்களில் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதந்தோறும் ராசியை மாற்றக்கூடியவர். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த சுக்கிரன் நவம்பர் 06 ஆம் தேதி வக்ர நிலையில் தனது பலவீனமான ராசியான கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கன்னி ராசியின் அதிபதி புதன் ஆவார்.

வக்ர நிலையில் கன்னி ராசிக்கு செல்லும் சுக்கிரனால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இருப்பினும், சுக்கிரனின் வக்ர நிலையால் அதன் முழு பலன்களை பெற நவம்பர் 14 ஆம் தேதி ஆகலாம். ஏனெனில் இந்நாளில் சுக்கிரன் நேர்கதியில் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கி, நல்ல பலன்களை முழுவீச்சில் அளிக்கவுள்ளார். இப்போது வக்ர சுக்கிரனால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனின் பெயர்ச்சியால் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் ஆளுமையில் மாற்றம் ஏற்படும். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். அதுவும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு செல்லும் சுக்கினால், இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை மேம்பட வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் எதிர்பாராத அளவில் வளர்ச்சியைக் காணக்கூடும். வியாபாரத்தில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முதலீடுகளை செய்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறக்கூடும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியானது மங்களகரமானதாக இருக்கும். ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள். நிதி நிலையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் உங்களின் படைப்பாற்றலும், கடின உழைப்பும் பாராட்டப்படும். வணிகர்களுக்கு கூட்டு தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். இதை பயன்படுத்திக் கொண்டால் நல்ல பலனைப் பெறலாம். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. முக்கியமாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
