இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் ராஜவாழ்க்கை வாழ்வார்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன?

Numerology: ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் வெற்றி, செல்வம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் மன நிறைவு ஆகியவை வெவ்வேறு கட்டங்களில் கிடைக்கலாம். அதில் சிலர் இளம் வயதிலேயே வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். இன்னும் சிலர் பல சவால்களையும், போராட்டங்களையும் தாண்டி, குறிப்பிட்ட வயதை எட்டிய பின் வெற்றி கனியை சுவைப்பார்கள். இப்படி ஒருவரது வெற்றிகரமான வாழ்க்கைக்கு பின் அந்நபரின் பிறந்த தேதி மற்றும் எண்களுக்கும் தொடர்புள்ளதாக எண் கணிதம் கூறுகிறது.

Numerology People Born On These Dates Will Have Luck After The Age Of 35

எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதி அந்நபரின் குணங்கள், எதிர்காலம், முடிவெடுக்கும் திறன், ப்ளஸ், மைனஸ் போன்ற விஷயங்களை தெரிவிப்பதாக நம்பப்படுகிறது. முக்கியமாக குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் தங்களின் 35 வயதிற்கு பின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, தொழில், வேலை, நிதி நிலை, குடும்ப வாழ்க்கையில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். அப்படி எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு 35 வயதுக்குப் பிறகு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பது குறித்து இப்போது காண்போம். இவை ஒரு எண் கணித நம்பிக்கைகளே தவிர, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட கணிப்புகள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எண் 3

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த எண்ணின் அதிபதி குரு பகவான். நவகிரகங்களில் குரு பகவான் ஞானம், அறிவு, செழிப்பு, அதிர்ஷ்டம் ஆகியவற்றின் காரணியாவார். எனவே இந்த எண்ணிற்குரிய தேதிகளில் பிறந்தவர்கள் ஆக்கப்பூர்வமானவர்கள், நம்பிக்கையானவர்கள். தங்களின் திறமைகளை வெளிப்படுத்த விரும்புவார்கள். இருந்தாலும், இவர்கள் எதிர்பார்த்த வெற்றியை உடனே பெறமாட்டார்கள். ஆரம்ப காலத்தில் அதிகம் போராட வேண்டியிருக்கும். நல்ல அனுபவங்களை பெற்ற பின் அவர்களின் திறமைக்கான சரியான இடம் கிடைக்கும் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.

எண் 4

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த எண்ணின் அதிபதி ராகு. எனவே இந்த எண்ணிற்குரியவர்கள் மற்றவர்களை விட வேறுபட்ட சிந்தனையை கொண்டிருப்பார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், எதையும் ஆழமாக படிக்கவும் விரும்புவார்கள். மேலும் இவர்களிடம் புதுபுது யோசனைகள் எப்போதும் இருக்கும். இருந்தாலும் இவர்கள் வாழ்வின் ஆரம்ப காலத்தில் நிறைய மன குழப்பத்தையும், சிரமங்களையும் எதிர்கொள்வார்கள். இத்தகையவர்களுக்கு 35 வயதிற்கு பின் தான் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும். முக்கியமாக இந்த வயதில் தான் சரியான முடிவுகளை எடுப்பார்கள். இதன் மூலம், தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல உயரத்தை அடைந்து வெற்றி பெறுவார்கள்.

எண் 9

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த எண்ணின் அதிபதி செவ்வாய் ஆவார். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான செவ்வாயால், இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தைரியமானவர்களாக, லட்சியமானவர்களாக இருப்பார்கள். எப்பேற்பட்ட சவாலையும் இவர்கள் ஏற்க தயாராக இருப்பார்கள். இருந்தாலும் வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் தங்களை நிரூபிக்க நிறைய சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். சில சமயங்களில் கோபம், அவசர முடிவுகள் போன்றவை முன்னேற்றத்தை தடுக்கலாம். ஆனால் இவர்கள் 35 வயதிற்கு பின் தங்களின் அனுபவத்தால் சரியான முடிவுகளை எடுப்பதன் மூலம், வாழ்வில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

எண் 8

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த எண்ணின் அதிபதி சனி பகவான் ஆவார். எனவே இந்த எண்ணிற்கு உரியவர்கள் கடின உழைப்பாளிகள், ஒழுக்கமானவர்கள் மற்றும் பொறுமையானவர்கள். இவர்களுக்கு வாழ்வில் எதுவும் எளிதில் கிடைத்துவிடாது. ஒவ்வொரு வெற்றியையும் பெற நிறைய போராட வேண்டியிருக்கும். இருந்தாலும், இவர்களிடம் உள்ள பலம் கடினமான சூழ்நிலைகளிலும் வலுவாக இருப்பார்கள். வாழ்வின் ஆரம்ப கட்டத்தில் பல தடைகளை சந்தித்தாலும், 35 வயதிற்கு பின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். தொழில் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியை காண்பார்கள். சமூகத்தில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, November 2, 2026, 21:41 [IST]
Desktop Bottom Promotion