Latest Updates
-
Dhanteras 2026: தந்தேராஸ் என்றால் என்ன? அந்நாளில் என்னென்ன பொருட்களை வாங்குவது நல்லது? -
இந்த தீபாவளிக்கு வேர்க்கடலையை வைச்சு இந்த வித்தியாசமான இனிப்பை செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
138 நாட்கள் கழித்து வக்ர நிவர்த்தி அடையும் சனிபகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் பண கஷ்டம் முடிவுக்கு வரப்போகுது! -
வாஸ்து படி குபேரரின் அருளை பெற்று கோடீஸ்வரராக உங்க வீட்டில் இந்த எளிய மாற்றங்களை செய்யுங்க போதும் -
குக்கரில் ஈஸியா மணக்க மணக்க ரசம் சாதம் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் எப்படி அச்சடிக்கப்படுகிறது? எங்கு அச்சடிக்கப்படுகிறது தெரியுமா? -
மழைக்காலத்தில் பரவும் எலி காய்ச்சல்.. அலட்சியம் செய்யக்கூடாத 7 அறிகுறிகள்! -
தீபாவளிக்கு வழக்கமான முறுக்கு செய்யாம இந்த பச்சை மிளகாய் தயிர் முறுக்கை செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க வாயை கொஞ்சம் அடக்கி இருக்கணும்! -
இந்தியாவின் 'அரிசித் தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? தென்னிந்திய மாநிலம் எதுவும் இல்லையாம்
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப டாக்ஸிக்கான காதலன், காதலியாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
மனிதர்கள் அனைவருக்குள்ளும் நல்ல மற்றும் தீய குணங்கள் இரண்டுமே இருக்கும். காதல் மற்றும் உறவுகளில், சிலர் தங்களிடம் உள்ள சிறந்த குணங்களை வெளிப்படுத்துகிறார்கள், மற்றவர்களோ மன அழுத்தம், குழப்பம் போன்ற தங்களின் எதிர்மறையான குணங்களை வெளிப்படுத்தலாம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் உறவுகளில் எதிர்மறை குணங்களுடன் போராட அதிக வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் இதை கட்டுப்படுத்தப்படாவிட்டால், இந்தப் பழக்கங்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக மாறக்கூடும்.

இதனால் அவர்கள் காதலில் மோசமானவர்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் அவர்களின் குணங்களால் உறவுகளில் ஆரோக்கியமற்ற சூழ்நிலை உருவாக்குவார்கள். இதனால் அவர்களுடன் உறவில் இருப்பவர்கள் சாதகமற்ற சூழநிலைகளையும், மோசமான அனுபவங்களையும் சந்திக்க நேரிடும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் காதலில் நச்சுத்தன்மையான குணம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள் மற்றும் பேரார்வம் கொண்டவர்கள், ஆனால் அதே சமயம் ஆதிக்கம் செலுத்தும் குணம் மற்றும் பொறாமை குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். உறவுகளில், விருச்சிக ராசியினர் பாதுகாப்பின்மையையோ அல்லது அச்சுறுத்தலையோ உணரும்போது எளிதில் பொறாமை கொண்டவர்களாக மாறிவிடுவார்கள். அவர்களின் நச்சு குணங்களில் சில சமயங்களில் மௌனமான புறக்கணிப்புகள், அதிகார விளையாட்டுகள் அல்லது தங்கள் துணையை உளவு பார்ப்பபது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் காதலில் துரோகத்திற்கு அஞ்சுகிறார்கள். காயப்படுவதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவை அவர்களை நச்சுத்தன்மை மிக்கவர்களாக மாற்றுகிறது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தைரியமான, உக்கிரமான மற்றும் ஆற்றல் நிறைந்த ராசியாகத் திகழ்கிறார்கள். அவர்கள் வேகமான உறவுகளை விரும்புகிறார்கள் மற்றும் பெரும்பாலும் விரைவாகக் காதலில் விழுகிறார்கள். ஆனால் அவர்கள் காதலில் ஆக்ரோஷமாகவும், பொறுமையற்றவர்களாகவும், சுயநலவாதிகளாகவும் இருக்கக்கூடும். அவர்கள் அனைத்து விஷயங்களும் தங்கள் விருப்பப்படியே நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள் மற்றும் தங்கள் துணையின் உணர்வுகளைப் பெரும்பாலும் புறக்கணிப்பார்கள். இந்த நெருப்பு ராசிக்காரர்கள் எளிதில் கோபமடையலாம் மற்றும் சிந்திக்காமல் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசலாம். தங்களை சக்திவாய்ந்தவர்களாக உணருவதற்காக அவர்கள் சண்டைகளைத் தொடங்கவும் கூடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வேடிக்கையானவர்கள், மற்றவர்களுடன் எளிதில் பழகுபவர்கள் மற்றும் அதிகம் பேசக்கூடியவர்கள். இந்த நற்குணங்கள் இருந்தாலும் அவர்கள் நம்பகத்தன்மையற்றவர்களாகவும், உணர்வுகளை புறக்கணிப்பவர்களாகவும் இருக்கக்கூடும். உறவுகளில், மிதுன ராசிக்காரர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணிப்பதில் சிரமப்படலாம் அல்லது தீவிர உணர்ச்சிகளைத் தவிர்க்கலாம். அவர்கள் அடிக்கடி விரைவாக தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்வார்கள், இது அவர்களின் துணையைக் குழப்பக்கூடும். அவர்களின் குழப்பமான மனநிலை அவர்களின் துணையை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கும்.
சிம்மம்
கிரகங்களின் ராஜாவான சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் தன்னம்பிக்கையும், அன்பும், கனிவும் கொண்டவர்கள். அதே சமயம் அகங்காரம் மற்றும் பிறர் கவனத்தை ஈர்க்கும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் உறவில், சிம்ம ராசியினர் எப்போதும் தாங்கள் சொல்வதுதான் சரி என்று நிரூபிக்க விரும்புவார்கள், தொடர்ந்து பாராட்டுகளை எதிர்பார்ப்பார்கள், மேலும் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணரும்போது கோபமடைவார்கள். சிம்ம ராசியினரின் அங்கீகாரத்திற்கான தேவை, அவர்களின் துணையைத் தாழ்வாகவோ அல்லது கவனிக்கப்படாதவராகவோ உணர வைக்கும். இதைச் சரியாகக் கையாளாவிட்டால், அது அவர்கள் உறவில் மிகப்பெரிய அழுத்தமாக மாறும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

