Latest Updates
-
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளும், நாணயங்களும் எப்படி அச்சடிக்கப்படுகிறது? எங்கு அச்சடிக்கப்படுகிறது தெரியுமா? -
மழைக்காலத்தில் பரவும் எலி காய்ச்சல்.. அலட்சியம் செய்யக்கூடாத 7 அறிகுறிகள்! -
தீபாவளிக்கு வழக்கமான முறுக்கு செய்யாம இந்த பச்சை மிளகாய் தயிர் முறுக்கை செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க வாயை கொஞ்சம் அடக்கி இருக்கணும்! -
இந்தியாவின் 'அரிசித் தலைநகரம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? தென்னிந்திய மாநிலம் எதுவும் இல்லையாம் -
இட்லி, தோசைக்கு ஏற்ற க்ரீன் கார சட்னி - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நவம்பர் 02, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
நவம்பர் 06-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பண மழை கொட்டப்போகுது! -
1/4 கிலோ கடலை மாவு இருந்தா, தீபாவளிக்கு 1 கிலோ சாப்ட்டான பூந்தி லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க.. -
நவம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
குக்கரில் ஈஸியா மணக்க மணக்க ரசம் சாதம் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
One Pot Rasam Rice Recipe In Tamil: தற்போது மழைக்காலம் என்பதால் மதிய வேளையில் சமைக்கவே சோம்பேறித்தனமாக இருக்கும். இப்படியான சூழ்நிலையில் சட்டென்று சமையலை முடிக்க நினைப்போம். முக்கியமாக மழை பெய்யும் போது ரசம் சாதம் சாப்பிட பலருக்கு பிடிக்கும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கும் ரசம் என்றால் ரொம்ப பிடிக்குமா? இதனால் தினமும் ரசம் செய்வீர்களா? அப்படியானால் சட்டென்று சமையலை முடிக்க ரசத்தையும், சாதத்தையும் தனித்தனியாக செய்யாமல், ஒன் பாட் ரெசிபியாக குக்கரில் செய்யுங்கள். இதன் மூலம் சமையலும் சட்டென்று முடியும், ரசம் சாதமும் சுவையாக இருக்கும்.

உங்களுக்கு இந்த ரசம் சாதத்தை குக்கரில் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரசம் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைத்து வேக வைப்பதற்கு...
* பச்சரிசி - 1 கப்
* துவரம் பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 4 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* பெரிய தக்காளி - 3 (நறுக்கியது)
ரசப்பொடிக்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 5-8 பல் (தட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி தண்டு - சிறிது
* ரசப்பொடி
* புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு
எடுத்தது)
* தண்ணீர் - 2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* பொடித்த வெல்லம் - 2 டீஸ்பூன்
* நெய் - 1 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் பச்சரிசி மற்றும் துவரம் பருப்பை எடுத்துக்
கொண்டு, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 4 கப் நீரை ஊற்றி, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள்
சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய
தக்காளி மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து கலந்து, குக்கரை மூடி,
3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், மல்லி, மிளகு, கடலைப் பருப்பு, வெந்தயம், வரமிளகாய்,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து அடுப்பை அணைத்துவிட்டு, பின்
அதில் சீரகத்தை சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அதன் பின் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய், தட்டிய பூண்டு, கறிவேப்பிலை மற்றும்
கொத்தமல்லி தண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ரசப் பொடியை சேர்த்து குறைவான தீயில் வைத்து நல்ல மணம்
வரும் வரை கிளறி, புளிச்சாற்றினை சேர்த்து, அத்துடன் 2 கப் நீரை
ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து, லேசாக
கொதிக்க வைக்க வேண்டும்.
* ரசம் கொதிக்க ஆரம்பித்தம், அதை இறக்கி குக்கரில் உள்ள சாதத்துடன்
சேர்த்து, மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* ஒருவேளை ரசம் சாதம் கெட்டியாக இருந்தால், அதில் தேவையான அளவு
சுடுநீரை ஊற்றி கலந்து, கொதிக்க ஆரம்பித்ததும், நெய் ஊற்றி கிளறி
இறக்கினால், சுவையான ரசம் சாதம் தயார்.



Click it and Unblock the Notifications
