Latest Updates
-
நவம்பர் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப் போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
தீபாவளிக்கு முன் இந்த பொருட்களை வீட்டில் இருந்து தூக்கிப் போடுங்க.. அப்ப தான் லட்சுமி தேவியின் அருள் கிட்டும்! -
November 2026 Tarot Predictions: உங்க பிறந்த தேதிப்படி நவம்பர் மாதம் எப்படி இருக்கும் தெரியுமா? -
ரோட்டுக்கடை சிக்கன் 65 மட்டும் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஊறுகாய் மற்றும் கருவாட்டை அதிகம் சாப்பிடுவது வயிற்றுப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா? விளக்கும் டாக்டர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 100 நாட்களில் இந்த 5 ராசிக்காரங்க அசுர வளர்ச்சியை காண்பார்களாம்! -
எப்பவும் சிக்கனை ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இப்படி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
நவம்பர் 01, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - இல்லனா ஆபத்துதான் -
செவ்வாய் சிம்ம ராசிக்குள் செல்வதால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
1/4 கிலோ கடலை மாவு இருந்தா, தீபாவளிக்கு 1 கிலோ சாப்ட்டான பூந்தி லட்டு செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Diwali Special Boondi Laddu Recipe In Tamil: தீபாவளிக்கு உங்கள் வீட்டில் எப்போதும் குலாப் ஜாமூனை தான் செய்வீர்களா? ஆனால் இதைத் தவிர வேறு ஸ்வீட் செய்ய விரும்பினால், பூந்தி லட்டு செய்யுங்கள். அதுவும் 1/4 கிலோ கடலை மாவு இருந்தால் போதும், நல்ல சாப்ட்டான, ஜூஸியான பூந்தி லட்டு செய்யலாம். இந்த பூந்தி லட்டு செய்வதற்கு சர்க்கரை பாகுவின் பதமும், பூந்தி மாவின் பதமும் மட்டும் முக்கியம். ஒருமுறை பூந்தி லட்டு செய்ய பழகிக் கொண்டால், பின் எந்த ஒரு பண்டிகை வந்தாலும், இந்த பூந்தி லட்டு செய்வீர்கள்.

உங்களுக்கு இந்த பூந்தி லட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூந்தி லட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூந்திக்கு..
* கடலை மாவு - 2 கப்
* சோடா உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - 3/4 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
வறுப்பதற்கு...
* நெய் - 1/4 கப்
* கிராம்பு - 3
* முந்திரி - தேவையான அளவு
* உலர் திராட்சை - தேவையான அளவு
சர்க்கரை பாகுவிற்கு...
* சர்க்கரை - 2 கப்
* தண்ணீர் - 1 கப்
* குங்குமப்பூ அல்லது பச்சை கற்பூரம் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன்
சோடா உப்பு சேர்த்து கைகளால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் நீரை ஊற்றி, கட்டிகளின்றி கலந்து கொள்ள வேண்டும்.
மாவின் பக்குவம் என்றால் மாவு மிகவும் நீராக இருக்கக்கூடாது, அதே
சமயம் மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது. இடைப்பட்ட நிலையில்
இருக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் வைத்து நன்கு சூடானதும், பெரிய
கண்ணு கரண்டியை எடுத்துக் கொண்டு, அதை எண்ணெய் வாணலிக்கு சற்று மேலே
உயர்த்தி பிடித்து, கலந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி,
பூந்தி ஓரளவு வெந்ததும், எடுத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று
அனைத்து மாவையும் பூந்தியாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக பூந்தி மொறுமொறுவென்று இருக்கக்கூடாது.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி
சூடானதும், கிராம்பு, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து நன்கு வறுத்து
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த வறுத்த பொருட்களை நெய்யுடன் அப்படியே பூந்தியுடன் சேர்க்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சிறிது பூந்தியை எடுத்துக் கொண்டு அரைத்து,
பூந்தியுடன் சேர்க்க வேண்டும். இப்படி செய்யும் போது லட்டு பிடிக்க
சுலபமாக இருக்கும்.
* அதன் பின் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை எடுத்துக் கொண்டு, நீரை
ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் குங்குமப்பூ அல்லது பச்சை
கற்பூரத்தை சேர்த்து, சர்க்கரை பாகு ஒரு மெல்லிய கம்பி பதத்திற்கு
வரும் வரை கொதிக்க வைத்து இறக்கி, சூடாக இருக்கும் போதே பூந்தியுடன்
சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி விட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.
அப்படி குளிர வைக்கும் போது, அடிக்கடி கிளறி விட வேண்டும். முக்கியமாக
மூடி வைத்துவிடக்கூடாது. இல்லாவிட்டால் லட்டு விரைவில்
கெட்டுவிடும்.
* பூந்தி நன்கு குளிர்ந்த பின், அவற்றை வேண்டிய அளவில் லட்டுகளாக
பிடித்தால், சுவையான மற்றும் மென்மையான பூந்தி லட்டு தயார்.



Click it and Unblock the Notifications
