1 கிலோ சிக்கன் வாங்குனா இந்த மாதிரி மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்

Posted By:

Mangalore Chicken Sukka Recipe in Tamil: இந்த வார ஞாயிறுக் கிழமை உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? சிக்கனை எப்போதும் பிரியாணி, சில்லி அல்லது வறுவல்தான் செய்வீர்களா? இந்த வாரம் சிக்கனை வைத்து ஒரு வித்தியாசமான ரெசிபியை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்காவை செய்து சாப்பிடுங்கள்.

Mangalore Chicken Sukka Recipe in Tamil

இந்த சுக்காவானது ஈஸியான செய்முறையை கொண்டிருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் சுக்கா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். வழக்கமான சிக்கன் வறுவல் சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இதன் சுவை மிகவும் பிடிக்கும்.

உங்களுக்கு மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மங்களூர் ஸ்டைல் சிக்கன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள்:

ஊறவைக்க:

- சிக்கன் - 1 கிலோ
- எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
- இஞ்சி-பூண்டு விழுது - 1 ½ டேபிள் ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 ½ டீ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ டீ ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்
- உப்பு - தேவைக்கேற்ப

மசாலா பொடி தயாரிக்க:

- மல்லி விதைகள் (தனியா) - 3 டீ ஸ்பூன்
- சீரகம் - 1 ½ டீ ஸ்பூன்
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- மிளகு - ½ டீ ஸ்பூன்
- வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்

குழம்பு செய்ய:

- வெங்காயம் - 3 (பெரியது)
- தக்காளி - 2 (பெரியது)
- தேங்காய் - 1 மூடி
- பச்சை மிளகாய் - 3
- பூண்டு பற்கள் - 2-3 பெரியது, பொடியாக நறுக்கியது
- கருவேப்பிலை - 15-20 இலைகள்
- சோம்பு - 1 டீ ஸ்பூன்
- பிரியாணி இலை - 2
- காய்ந்த மிளகாய் - 2
- தேங்காய் எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

- முதலில் சிக்கனை இரண்டு முறை தண்ணீரில் சுத்தமாக அலசி, பின் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்கு கழுவி எடுத்து கொள்ளவும்.

- வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து மேற்பரப்பில் இருக்கும் கருப்பு நிற புஞ்சையை நீக்க நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

- நன்கு பழுத்த தக்காளியை சுத்தமாக கழுவி அதன் பச்சை நிற காம்பு பகுதியை நீக்கி விட்டு பொடிப்பொடியாக நறுக்கி வைக்கவும். தேங்காயை நன்கு துருவி எடுத்து கொள்ளவும்.

- பச்சை மிளகாயை கழுவி காம்புகளை நீக்கி விட்டு இரண்டாக கீறி கொள்ளவும். கொத்தமல்லியை மண் இல்லாமல் சுத்தமாக தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

- வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்க்காமல், மல்லி விதைகள், சீரகம், சோம்பு, மிளகு, மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு சிவந்து மணம் வரும் வரை வறுத்து ஆற விடவும்.

- நன்கு ஆறியதும் ஈரமில்லாத மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

- பின் ஒரு பாத்திரத்தில், கழுவி வைத்த சிக்கனை சேர்க்கவும். அதனுடன் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு, இஞ்சி-பூண்டு விழுது, நிறத்திற்கு காஷ்மீரி மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மற்றும் கரம் மசாலா தூள் சேர்க்கவும்.

- கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலா ஒட்டும் படி நன்கு கலந்து, குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஊற விடவும்.

- அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும். அதில் பிரியாணி இலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

- அதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து நன்கு குழைந்து மென்மையாக வேகும் வரை வதக்கவும்.

- பின் அதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு வேக விடவும். சிக்கன் வேகும் போதே தண்ணீர் வந்திருக்கும், அதனுடன் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும்.

- தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும். பின் சிக்கன் நன்றாக வெந்ததும், குழம்பு நன்கு கெட்டியாகும் வரை வைத்திருக்கவும். கடைசியாக துருவிய தேங்காய் மற்றும் கீறி வைத்த பச்சை மிளகாய் சேர்த்து கிளறி சில நிமிடங்கள் வேக விடவும்.

- நன்கு வெந்து மசாலா உலர்வாக வரும் போது, சிறிது எலுமிச்சை பழச்சாறு மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மங்களூர் சிக்கன் சுக்கா ரெடி! இது சாதம், நெய் சாதம் அல்லது பரோட்டாவுடன் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.

[ of 5 - Users]
Story first published: Saturday, October 31, 2026, 23:03 [IST]
Desktop Bottom Promotion