நவம்பரில் சிம்ம ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!

Trigrahi Yog In Leo On 12 November 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே நிழல் கிரகமான கேது பயணித்து வருகிறார். இதனால் சிம்ம ராசியில் கேது மற்றும் குருவின் சேர்க்கை நிகழும்.

Trigrahi Yog In Leo On 12 November 2026 These Zodiac Signs Luck Will Shine

அத்துடன் நவம்பர் 12 ஆம் தேதி கிரகங்களின் தளபதியாக கருதப்படும் மற்றும் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியான செவ்வாய் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதன் காரணமாக சிம்ம ராசியில் குரு, கேது மற்றும் செவ்வாயின் சேர்க்கை நிகழவுள்ளது. இப்படி மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் ஒன்றிணைவதால், திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் தொழில், வியாபாரம் மற்றும் நிதி ரீதியாக நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் காணவுள்ளார்கள். இப்போது சிம்ம ராசியில் குரு, கேது, செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் திரிகிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

நீண்ட காலமாக பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நேர்மறையான பலன்களைப் பெறக்கூடும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். இருந்தாலும், எந்த ஒரு நிதி தொடர்பான முடிவுகளையும் அவசரப்பட்டு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும். வேலை மாற்றம், பதவி உயர்வு அல்லது புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்புள்ளது.

வியாபாரிகளுக்கு புதிய தொடர்புகளால் நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வரவு திட்டத்தை சரியாக பராமரித்தால், நிறைய பணத்தை சேமிக்க முடியும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு முதலீட்டையும் செய்யும் முன்பும், நன்கு அலசி ஆராய்ந்த பின் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்கரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும். சிலருக்கு புதிய பொறுப்புகள் பணியிடத்தில் வழங்கப்படலாம்.

போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு தங்களின் திறனை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். வணிகர்கள் எந்த ஒரு முடிவை எடுக்கும் போதும் யோசித்து எடுத்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். மொத்தத்தில் எதையும் பொறுமையாகவும், திட்டமிட்டு செய்வதன் மூலமும், நிதி நிலையை மேம்படுத்த முடியும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, October 30, 2026, 23:48 [IST]
Desktop Bottom Promotion