வாஸ்துப்படி வீட்டு வாசலில் இந்த 5 செடிகளை வாங்கி வையுங்க.. வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும்!

Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் நுழைவாயிலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல், மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பு வருவதற்கு நுழைவாயில் அமைப்பு முக்கியப் பங்கு வகிப்பதாகப் பாரம்பரியமாக நம்பப்படுகிறது. எனவே இப்பகுதியை எப்போதும் அழகாகவும், சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்திருக்க வேண்டும்.

Vastu Tips Best 5 Lucky Plants For Home Entrance

அதுவும் வீட்டு வாசலில் சில குறிப்பிட்ட செடிகளை வளர்ப்பது அதிர்ஷ்டத்தையும் செல்வ வளத்தையும் ஈர்ப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி செடிகளானது வீட்டின் நுழைவாயிலைப் பசுமையாகவும் அழகாகவும் மாற்றுவதுடன், சுற்றுப்புறச் சூழலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கின்றன. இருப்பினும், செடிகளைத் தேர்ந்தெடுக்கும்போது அவற்றுக்குத் தேவையான சூரிய ஒளி, தண்ணீர் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வாஸ்துப்படி வீட்டு வாசலில் எந்தெந்த செடிகளை வைத்தால் அதிர்ஷ்டத்தைத் தரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டின் நுழைவாயிலில் வைக்க வேண்டிய அதிர்ஷ்டம் தரும் 5 செடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. மணிபிளாண்ட்

செடிகளுள் மணிபிளான்ட் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வளர்த்தால் அது பண வரவை அதிகரிக்கும். அதுவும் இந்த செடியை வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் தென்கிழக்கு திசையில் வைப்பது மிகவும் நல்லது. முக்கியமாக இந்த செடியை பச்சை அல்லது பழுக்க நிற தொட்டியில் நீர் அல்லது மண்ணில் நட வேண்டும்.

2. மூங்கில் செடி

வாஸ்துப்படி மூங்கில் செடி நீண்ட ஆயுள், வெற்றி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தின் அடையாளமாகும். இந்த செடியை பிரதான நுழைவாயிலுக்கு அருகில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைப்பது மங்களகரமானது. இதில் 5 தண்டுகள் கொண்ட மூங்கில் செடி ஆரோக்கியத்தையும், 7 தண்டுகள் கொண்ட செடி செல்வத்தையும், 9 தண்டுகள் கொண்ட செடி நல்ல அதிர்ஷ்டத்தையும் குறிக்கிறது.

3. மல்லிகை செடி

மல்லிகை செடியின் நல்ல மணம் மனதிற்கு அமைதியையும், நேர்மறை ஆற்றலையும் தருகிறது. இந்த செடியை வீட்டின் பிரதான நுழைவாயிலின் இடது பக்கத்தில் வைப்பது நல்லது. இந்த செடியின் நறுமணம் லட்சுமி தேவியின் வருகையின் சின்னமாக கருதப்படுகிறது. இந்த செடிக்கு போதுமான சூரிய ஒளி, தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்.

4. பாம்பு செடி

வீட்டின் நுழைவாயிலுக்கு அருகில் பாம்பு செடியை வைப்பது நல்லது. இந்த செடிக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை. மேலும் இந்த செடி காற்றைச் சுத்திகரித்து, உயிர் ஆற்றலை மேம்படுத்துகின்றன. இந்த செடியை வைக்க சிறந்த திசை வடக்கு அல்லது கிழக்கு திசையாகும்.

5. ஜேட் செடி

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஜேட் செடி நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் செடியாக கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டின் நுழைவாயிலின் வலது பக்கத்தில் வைப்பது மங்களகரமானதாகும். இந்த செடி செல்வம், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, October 30, 2026, 23:10 [IST]
Desktop Bottom Promotion