Latest Updates
-
செட்டிநாடு முருங்கைக்கீரை கொள்ளு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - எடை புயல் வேகத்துல குறையும் -
6 பேர் மட்டுமே வசிக்கும் உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவு - இந்த தீவில் என்ன அதிசயம் இருக்கு தெரியுமா? -
29 ஆண்டுகளுக்கு பின் மேஷம் செல்லும் சனிபகவான்: 2027-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் கோதுமை ரவையும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. -
அக்டோபர் 30, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சவால்களும், சாதனைகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
நவம்பர் 22-ல் சுக்கிரன் சொந்த ராசிக்குள் செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
நவம்பர் 03-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு எலி எப்படி வாகனமாக மாறியது தெரியுமா? -
தீபாவளிக்கு 1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இந்த ரிப்பன் பக்கோடா செய்யுங்க.. 10 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
Diwali 2026: இந்த தீபாவளிக்கு லட்சுமி தேவியின் ஆசியை பெற உதவும் எளிய வாஸ்து டிப்ஸ்கள் - மறக்காம செய்யுங்க
தொடர்ந்து 30 நாட்கள் தினமும் பூசணி விதைகளை சாப்பிட்டால் உடலில் என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?
Pumpkin Seeds Benefits In Tamil: உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் தங்கள் தினசரி உணவில் சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களை சேர்த்து கொள்ள வேண்டும். அந்த வகையில் அளவில் சிறியதாக இருந்தாலும் ஏராளமான ஊட்டச்சத்துக்களைக் கொண்டவைகள் தான் விதைகள். இந்த விதைகளில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் பூசணி விதைகள்.
இந்த பூசணி விதைகளில் புரோட்டீன், நார்ச்சத்து, மக்னீசியம், ஜிங்க் மற்றும் நல்ல கொழுப்புக்கள் போன்றவை இருப்பதால், இவற்றை தினசரி உணவில் சேர்த்து வரும் போது உடலின் செயல்பாடு சீராக இருக்கும். அதற்கு இந்த விதைகளை ஸ்நாக்ஸ் நேரத்திலோ அல்லது சாலட்டுகளுடனோ அல்லது பிற உணவுகளுடனோ சேர்த்து சாப்பிடலாம்.

அதுவும் இந்த பூசணி விதைகளை தினமும் ஒரு கையளவு என தொடர்ந்து 30 நாட்கள் உட்கொண்டு வருவதன் மூலம், உடலினுள் பல அற்புதமான மாற்றங்களைக் காணலாம். இருப்பினும், பூசணி விதைகளை 30 நாட்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் அனைவருக்கும் ஒரே மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்று கூற முடியாது. உணவுப் பழக்கம், உடல்நிலை மற்றும் சாப்பிடும் அளவைப் பொறுத்து அதன் தாக்கம் மாறுபடும். இப்போது தினமும் பூசணி விதைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
1. இதயம், தசைகளின் செயல்பாடு நன்றாக இருக்கும்
பூசணி விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த மக்னீசியம் உடலுக்கு போதுமான அளவில் கிடைக்கும் போது, இதயம் மற்றும் தசைகளின் செயல்பாடு சீராக இருக்கும். இதன் மூலம் இதய நோயின் அபாயம் குறையும். அதுவும் இந்த விதைகளை சமச்சீரான உணவின் ஒரு பகுதியாக எடுக்கும் போது, அவற்றில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் இதயத்திற்கு நன்மை அளிக்கின்றன. இருந்தாலும் உடலில் மக்னீசியம் குறைபாடு இருந்தால், வெறும் பூசணி விதைகளை மட்டும் சாப்பிடாமல், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
2. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பூசணி விதைகளில் ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. இந்த ஜிங்க் நோயெதிர்ப்பு மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைப்பதோடு, காயங்களை விரைவில் குணப்படுத்த உதவுகிறது. எனவே இதுவரை அடிக்கடி நோய்வாய்ப்பட்டு வந்தால், தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய ஜிங்க் சத்து கிடைக்கும்.
3. எடை இழப்புக்கு உதவும்
பூசணி விதைகளில் நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் அதிகம் உள்ளன. இந்த பூசணி விதைகளை ஸ்நாக்ஸ் நேரத்தில் எடுக்கும் போது, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதன் மூலம் கண்ட உணவுகளின் மீதான நாட்டம் குறைந்து, உடல் எடை குறைய உதவி புரியும். ஆனால் பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் இருந்தாலும், அவற்றில் கலோரிகளும் அதிகம் உள்ளன. எனவே, நீங்கள் உடல் எடையைக் குறைக்க விரும்பினால், இவற்றை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளாதீர்கள்.
4. ஆண்களின் கருவுறுதல் திறன் அதிகரிக்கும்
பூசணி விதைகளை ஆண்கள் தங்களின் தினசரி உணவில் சேர்த்து வரும் போது, ஆண்களின் கருவுறுதல் தொடர்பான பிரச்சனைகளான விந்து வெளியேறுவதில் தாமதம் மற்றும் பாலியல் தூண்டுதல் போன்றவை மேம்படும். எப்போது ஆண்களுக்கு ஜிங்க் குறைபாடு ஏற்படுகிறதோ, அப்போது அது விந்தணுவின் தரத்தையும், விந்தணுக்களின் வளர்ச்சியையும் பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. எனவே இதுப்போன்ற பாலியல் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க வேண்டுமானால், ஆண்கள் தங்களின் தினசரி உணவில் பூசணி விதைகளை எடுப்பது நல்து.
5. மார்பக புற்றுநோயின் அபாயம் குறையும்
பூசணி விதைகளில் பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் என்னும் சேர்மங்கள் உள்ளன. இந்த சேர்மங்களானது ஈஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோனைப் போன்றவை. எனவே இந்த பைட்டோஈஸ்ட்ரோஜன்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மார்பகப் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக சில சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆகவே மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க நினைத்தால், பூசணி விதைகளை தினசரி உணவில் சேர்த்து வாருங்கள்.
6. நல்ல தூக்கம் கிடைக்கும்
பூசணி விதைகளில் ட்ரிப்டோஃபான் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இது இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கும் மெலடோனின் மற்றும் செரோடோனின் ஆகிய ஹார்மோன்களை உடல் உற்பத்தி செய்ய உதவுகிறது. இவற்றில் மெலடோனின் தூக்க-விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் செரோடோனின் மனநிலையையும் தூக்கத்தையும் சீராக்க உதவுகிறது. எனவே தூக்க பிரச்சனையால் சிரமப்படுபவர்கள் பூசணி விதைகளை தினமும் உட்கொண்டு வரும் போது, அப்பிரச்சனை சரியாகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
