Latest Updates
-
அக்டோபர் 30, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு சவால்களும், சாதனைகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
நவம்பர் 22-ல் சுக்கிரன் சொந்த ராசிக்குள் செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
நவம்பர் 03-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
முழுமுதற் கடவுளான விநாயகருக்கு எலி எப்படி வாகனமாக மாறியது தெரியுமா? -
தீபாவளிக்கு 1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. இந்த ரிப்பன் பக்கோடா செய்யுங்க.. 10 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
Diwali 2026: இந்த தீபாவளிக்கு லட்சுமி தேவியின் ஆசியை பெற உதவும் எளிய வாஸ்து டிப்ஸ்கள் - மறக்காம செய்யுங்க -
Vastu Tips: வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டின் எந்த திசையில் தொங்கவிட வேண்டும் தெரியுமா? -
தஞ்சாவூர் தவலை அடை ரெசிபி - இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஆசையா நிறைய சாப்பிடுவாங்க -
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
1 கப் கோதுமை ரவையும், 1/2 கப் பாசிப்பருப்பும் இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க..
Gothumai Rava Pongal Recipe In Tamil: காலையில் எப்போதும் இட்லி, தோசை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று புதுமையான காலை டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பொங்கல் என்றால் ரொம்ப பிடிக்குமா? பொதுவாக பொங்கலை பச்சரிசி கொண்டு செய்வோம்.

ஆனால் அடுத்தமுறை பொங்கல் செய்வதாக இருந்தால், வீட்டில் கோதுமை ரவையும், பாசிப்பருப்பும் இருந்தால், அவற்றைக் கொண்டு பொங்கல் செய்யுங்கள். இந்த பொங்கல் மிகவும் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட. கோதுமை ரவையை சாப்பிட பிடிக்காதவர்களுக்கு இப்படி பொங்கலாக செய்து கொடுக்கும் போது கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு இந்த கோதுமை ரவா பொங்கல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை ரவா பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்ள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* கோதுமை ரவை - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 4 கப்
* துருவிய இஞ்சி - சிறிது
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - தேவையான அளவு
* இஞ்சி - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் குக்கரில் கோதுமை ரவையை கழுவி எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவி சேர்க்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நீரை ஊற்றி, துருவிய இஞ்சி, சீரகம், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து கலந்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3-4 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
மிளகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் முந்திரியை சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்
தூள் சேர்த்து நன்கு வதக்கி, அதை அப்படியே குக்கரில் உள்ள பொங்கலுடன்
சேர்த்து கிளறினால், சுவையான கோதுமை ரவா பொங்கல் தயார்.



Click it and Unblock the Notifications
