நவம்பர் 03-ல் நடக்கும் புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!

Mercury Transit In Swaathi Nakshatra 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர் தான் புதன். இந்த புதன் தற்போது விசாகம் நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் நவம்பர் 03 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.

Mercury Transit In Swaathi Nakshatra 2026 These Zodiac Signs Will Become Wealthy

இந்த சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். புதன் ராகுவின் நட்சத்திரத்திற்கு செல்வதால், அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. முக்கியமாக அந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயயங்களுடன் தொழிலில் முன்னேற்றத்தையும் காணவுள்ளனர். இப்போது புதன் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி மற்றும் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.

மிதுனம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுத்திறன் மேம்படும். பணியிடத்தில் சிறப்பான படைப்பாற்றலை வெளிக்காட்டி, உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வேலையை மாற்ற நினைத்து, அதற்காக முயற்சிப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்கள் அல்லது கூட்டு வணிகம் காரணமாக நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.

சிம்மம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் புதிய யோசனைகள் உயர் அதிகாரிகளால் ஏற்றுக் கொள்ளப்படலாம். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வணிகர்கள் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். பண வரவு அதிகரிக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

துலாம்

புதன் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான தகவல் தொடர்பு திறனால் முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது. புதிய நட்புகள் இக்காலத்தில் கிடைக்கும். இந்த நட்பு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். வரவு செலவுகளுக்கு இடையில் சமநிலையை பேண வேண்டும். இதனால் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 29, 2026, 23:27 [IST]
Desktop Bottom Promotion