Latest Updates
-
தஞ்சாவூர் தவலை அடை ரெசிபி - இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லாரும் ஆசையா நிறைய சாப்பிடுவாங்க -
Hair Care: கருகருவென நீளமான முடி வேணுமா? அப்ப முட்டையை இந்த மாதிரி முடியில் யூஸ் பண்ணுங்க -
வெயிலால் கருமையான முகத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப செம்பருத்தி பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
வர நவம்பர் மாதம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் தெரியுமா? அடேங்கப்பா இவ்வளவா? -
மணமணக்கும்.. செட்டிநாடு வெங்காய ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசி அள்ளும்.. -
1 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் சாம்பார் வைச்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
World Stroke Day 2026: உயர் இரத்த அழுத்தம் பக்கவாத அபாயத்தை அதிகரிப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
இந்திய வரலாற்றில் 49 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த ஒரே அரசர் யார்? அவர் எந்த வம்சத்தை சேர்ந்தவர் தெரியுமா? -
வரப்போகும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்..
Vastu Tips: வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டின் எந்த திசையில் தொங்கவிட வேண்டும் தெரியுமா?
Vastu Tips For Wall Clock: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களுமே அந்த வீட்டின் ஆற்றல் ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் தான் வீட்டில் எந்த ஒரு பொருளை வைப்பதாக இருந்தாலும், அதை வாஸ்து பார்த்து வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு வீடு மற்றும் அந்த வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்து சாஸ்திர விதிகளின் படி இருக்கும் போது, அந்த வீட்டில் அமைதியும், செல்வமும், செழிப்பும் நிறைந்திருக்கும். முக்கியமாக வீட்டில் நேரம் பார்க்க உதவும் கடிகாரம், வெறும் நேரத்தை மட்டும் பார்க்க உதவுவதில்லை; அது அந்த வீட்டில் பாயும் ஆற்றலிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே தான் வீட்டின் சுவற்றில் கடிகாரத்தை மாட்டும் போது, அதை வாஸ்து பார்த்து, சரியான இடத்தில், சரியான திசையில் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இப்படி சரியான இடத்தில் கடிகாரத்தை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதுவே தவறான திசையில் கடிகாரத்தை வைக்கும் போது, அது அந்த வீட்டில் உள்ளோருக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும், காரிய தடைகளை ஏற்படுத்தும் மற்றும் பண பிரச்சனைகளால் சிரமப்பட வைக்கும். இப்போது வாஸ்துப்படி கடிகாரத்தை வீட்டில் எந்த திசையில் வைப்பது நல்லது என்பதைக் காண்போம்.
எந்த திசையில் கடிகாரத்தை வைக்க வேண்டும்?
வடக்கு திசை - மிகவும் மங்களகரமானது
வாஸ்துப்படி, வடக்கு திசை செல்வத்தின் கடவுளான குபேரனால் ஆளப்படுகிறது. இந்த திசையில் கடிகாரத்தை வைக்கும் போது, அது செழிப்பு, நிதி வளர்ச்சி மற்றும் தொழில் வெற்றியை ஈர்க்கிறது. இந்த திசையில் வைக்கும் கடிகாரம் எப்போதும் இயங்கும் நிலையிலும், பார்வைக்குத் தெரியும் வகையிலும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கிழக்கு திசை - நேர்மறை ஆற்றலுக்கு சிறந்தது
வாஸ்துப்படி, கிழக்கு சூரியனுடனும், புதிய தொடக்கங்களுடனும் தொடர்புடையது. இந்த திசையில் கடிகாரத்தை வைக்கும் போது, அது உடல்நலத்தை மேம்படுத்துகிறது, மன அமைதியைத் தருகிறது, மற்றும் குடும்ப உறவுகளைச் சீராக்குகிறது. ஹால் மற்றும் படுக்கை அறையில் கடிகாரம் வைப்பதாக இருந்தால், இந்த திசையில் வைப்பது நல்லது.
வடகிழக்கு திசை
வாஸ்துப்படி வடகிழக்கு திசை ஒரு புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த திசையில் கடிகாரத்தை வைக்கும் போது, அது தெளிவு, கவனம் மற்றும் ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கிறது. ஆனால் இந்த திசையில் கடிகாரத்தை வைப்பதாக இருந்தால், அடர்த்தியான அல்லது கருமையான வடிவமைப்புகள் இல்லாத ஒரு எளிய கடிகாரத்தைப் பயன்படுத்துங்கள்.
எந்த திசையில் கடிகாரத்தை வைக்கக்கூடாது?
தெற்கு திசை
வாஸ்துப்படி கடிகாரத்தை தெற்கு திசையில் ஒருபோதும் வைக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது தாமதங்கள், மன அழுத்தம் மற்றும் நிதி இழப்புகளுக்கு வழிவகுக்கும். அதுவும் எந்தவொரு அறையின் தெற்குச் சுவரிலும் கடிகாரங்களை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
தென்மேற்கு திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தென்மேற்கு திசையிலும் கடிகாரத்தை வைக்கக்கூடாது. ஏனெனில் இந்தத் திசை முன்னேற்றத்தைத் தடுத்து, எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரக்கூடும். எனவே உங்கள் வீட்டில் இந்த திசையில் கடிகாரம் இருந்தால், அதை வேறு இடத்திற்கு உடனே மாற்றுங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
