வரப்போகும் குரு பெயர்ச்சிக்கு பின் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்..

Jupiter Transit In Leo 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவான் அறிவு, செல்வம், திருமணம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பின் காரணியாவார்.

Jupiter Transit In Leo 2026 These Zodiac Signs Should Be Cautious In Money Matters

இந்த குரு பகவான் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதி குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். குரு பகவானின் இந்த அதிசார பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வந்தாலும், சில ராசிக்காரர்கள் தொழில், பணம் போன்ற விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பஞ்சாங்கத்தின் படி, அக்டோபர் 31 ஆம் தேதி குரு பகவான் சிம்ம ராசிக்குள் நுழைவார். இந்த சிம்ம ராசியில் குரு பகவான் ஜனவரி 25 ஆம் தேதி வரை இருந்து, பின் வக்ர நிலையில் மீண்டும் கடக ராசிக்குள் நுழைவார். குரு பகவானின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சிக்கு பின் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது 2026 குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் குடும்ப வாழ்க்கையில் இடையே சமநிலையைப் பராமரிக்க வேண்டும். பணியிடத்தில் அதிக பொறுப்புகள் உங்களை மிகவும் பிஸியாக வைத்திருக்கும். செய்யும் வேலைகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கொடுக்கப்பட்ட வேலையை சரியான நேரத்தை முடிக்க முயற்சிக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து செய்ய வேண்டும். முக்கியமாக முதலீடுகளை செய்யும் முன் அனைத்து அம்சங்களையும் சரிபார்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது பொறுமை அவசியம். இல்லாவிட்டால் தவறான புரிதல்களால் உறவில் விரிசல் ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசியின் 11 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக முக்கியமானதாக இருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு அதை மாற்றுவது பற்றி யோசிக்க நேரம் கிடைக்கும். இருந்தாலும் இக்காலத்தில் எந்த ஒரு முன்மொழிவையும் ஏற்றுக் கொள்ளும் முன், நன்கு யோசித்து பின் முடிவெடுக்க வேண்டும்.

கூட்டு வணிகம் செய்பவர்கள் பண பரிவர்த்தனைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ரிஸ்க் எடுத்து எந்த ஒரு முதலீடுகளையும் செய்யாதீர்கள். கொடுக்கல் வாங்கல் ஆவணங்களை நன்கு கவனமாக படித்த பின் முடிவெடுக்க வேண்டும். உறவுகளில் தெளிவான தொடர்பு மிகவும் முக்கியம். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையால் சிரமப்படக்கூடும்.

மீனம்

மீன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு குரு பகவான் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் திட்டங்கள் மற்றும் பொறுப்புகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளுவை உணர்ந்தால், அப்போது அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். வேலையை உரிய நேரத்தில் முடிக்க முடியாமல் போனால், உடனே விரக்தி அடையாமல், அதற்கான காரணத்தை கண்டறியுங்கள்.

நிதி விஷயங்களில் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். பெரிய முதலீடுகளை செய்ய நினைக்கும் போது ரிஸ்க்குகளை கவனிக்க வேண்டும். கடன் வாங்கும் போதும் அதை திருப்பி செலுத்த முடியுமா என்பதை பார்த்து, அதன் பின் முடிவெடுக்க வேண்டும். குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்தால், அதை அமைதியாக பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். முக்கியமாக ஆரோக்கியத்தை புறக்கணிக்காதீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 29, 2026, 10:22 [IST]
Desktop Bottom Promotion