Latest Updates
-
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க - இல்லனா மிஷின் வீணாகிரும் -
குரு பெயர்ச்சி 2026: மகரம், கும்பம், மீனம் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா? -
மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இந்தியாவில் வெடிக்கும் நிலையில் உள்ள ஒரே எரிமலை எது? அது எந்த ஊரில் இருக்கிறது தெரியுமா? -
இளைஞர்களுக்கும் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுமா? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? விளக்கும் டாக்டர்! -
சப்பாத்தி, பூரிக்கு பக்கவா இருக்கும் முகலாய ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க -
மகம் நட்சத்திரம் செல்லும் குரு: அடுத்த 2 1/2 மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது -
'பறவைகளின் ராஜா' என்று அழைக்கப்படும் பறவை எது? ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
4 தக்காளியும், 5 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 28, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம்
நரைமுடியை மறைக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஹேர் டைகளை ட்ரை பண்ணுங்க..
Natural Hair Dye In Tamil: வயது அதிகரிக்கும் போது தலைமுடி நரைப்பது என்பது இயல்பான ஒன்றாகும். ஆனால் தற்போது இளம் வயதிலேயே நிறைய பேருக்கு நரைமுடி வந்து, முதுமைத் தோற்றத்தைத் தருகிறது. இப்படி இளமையிலேயே தலைமுடி நரைப்பது பலருக்கு மனக்கவலையை ஏற்படுத்தலாம். ஒருவருக்கு தலைமுடி நரைப்பதற்கு மரபணு, வயது, சில ஊட்டச்சத்துக் குறைபாடுகள் போன்ற பல காரணயங்கள் இருக்கலாம். இந்த நரைமுடியை மறைக்க பலரும் பார்லர் சென்று அதிக பணம் செலவழித்து கலரிங் செய்து கொள்வார்கள்.

ஆனால் அவற்றில் உள்ள சில கெமிக்கல்கள் சென்சிடிவ் ஸ்கால்ப்பில் எரிச்சல் அல்லது அழற்சியை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மாற்று வழிகளை நிறைய பேர் தேடுகின்றனர். அந்த வகையில் நம் வீட்டில் உள்ள சில இயற்கை பொருட்களைக் கொண்டே தலைமுடியை இயற்கையாகவே நிறமூட்டலாம். இந்த இயற்கை பொருட்களுள் சில தற்காலிக நிறத்தை அளிக்கலாம்.
இருப்பினும் இயற்கையான பொருட்கள் அனைத்தும் நரைமுடியை முழுமையாக மறைக்கும் என்று கூற முடியாது. கிடைக்கும் நிறமும் அதன் நீடித்த தன்மையும் முடியின் இயல்பான நிறம் மற்றும் பயன்படுத்தும் பொருட்களைப் பொறுத்து மாறுபடும். இப்போது நரைமுடியை மறைக்க வீட்டிலேயே எப்படி நேச்சுரல் ஹேர் டைகளை தயாரித்து பயன்படுத்துவது என்பதைக் காண்போம்.
1. நெல்லிக்காய் மற்றும் ஹென்னா பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 1 கப் ஹென்னா பவுடர், 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் கைகளில் கையுறையை அணிந்து கொண்டு, தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை தலைமுடியில் பிரஷ் பயன்படுத்தி தடவ வேண்டும்.
* பின்பு அதை 1 மணிநேரம் காய வைக்க வேண்டும்.
* இறுதியாக சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
2. கேரட் ஹேர் டை பேக்
* இந்த ஹேர் டை பேக்கிற்கு ஒரு பௌலில் 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 கப் கேரட் ஜூஸை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை தலைமுடியில் தடவி, ஷவர் கேப் அணிந்து, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஆப்பிள் சீடர் வினிகரைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
3. பீட்ரூட் ஹேர் டை பேக்
* இந்த பேக்கிற்கு ஒரு பௌலில் 1 கப் பீட்ரூட் ஜூஸ் மற்றும் 6 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் தடவி, ஷவர் கேப் கொண்டு தலைமுடியை மூடிக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதை குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நுரைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
4. நெல்லிக்காய் பவுடர் ஹேர் கலர் பேக்
* இந்த ஹேர் கலர் பேக்கிற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் மற்றும் 12 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து ப்ரௌன் நிறத்தில் வரும் வரை கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை குளிர வைத்து, அந்த பேஸ்ட்டை தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* விருப்பமிருந்தால், இதை இரவு முழுவதும் கூட ஊற வைக்கலாம்.
* பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.
5. ப்ளாக் டீ மற்றும் ஹென்னா ஹேர் டை பேக்
* இந்த ஹேர் டை பேக்கிற்கு ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் ஹென்னா பவுடரை எடுத்து, நீரை ஊற்றி பேஸ்ட் செய்து 8 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் ப்ளாக் டீ இலைகளை 2 டேபிள் ஸ்பூன் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அந்த பேஸ்ட் உடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை தலைமுடியில் தடவி, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
