Latest Updates
-
இந்தியாவில் வெடிக்கும் நிலையில் உள்ள ஒரே எரிமலை எது? அது எந்த ஊரில் இருக்கிறது தெரியுமா? -
இளைஞர்களுக்கும் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்படுமா? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? விளக்கும் டாக்டர்! -
சப்பாத்தி, பூரிக்கு பக்கவா இருக்கும் முகலாய ஸ்டைல் வெஜ் குருமா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க -
மகம் நட்சத்திரம் செல்லும் குரு: அடுத்த 2 1/2 மாதம் இந்த 3 ராசிக்காரர்களின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது -
'பறவைகளின் ராஜா' என்று அழைக்கப்படும் பறவை எது? ஏன் அப்படி அழைக்கப்படுகிறது தெரியுமா? -
4 தக்காளியும், 5 ஸ்பூன் உளுத்தம் பருப்பும் இருந்தா.. இந்த சட்னியை ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 28, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பிருக்காம் -
தீபாவளிக்கு முன் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்! -
சூரியன் ஸ்வாதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஸ்கூலுக்கு ஒருவாட்டி இப்படி குஸ்கா செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க..
Madurai Style Egg Kuzhambu Recipe In Tamil: மாத இறுதி வந்தாலே சிக்கன், மட்டனுக்கு பதிலாக முட்டையைத் தான் பலரும் அதிகம் செய்து சாப்பிடுவோம். அப்படி முட்டையைக் கொண்டு குழம்பு வைக்கும் போது, எப்போது ஒரே சுவையில் தான் முட்டை குழம்பை செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் முட்டை குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றி முட்டை குழம்பை செய்யுங்கள்.

இந்த முட்டை குழம்பு செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, வீடே மணக்கும் வகையில் அட்டகாசமாக இருக்கும். இந்த சுவையில் குழம்பை செய்யும் போது, மட்டன் குழம்பு சாப்பிட்ட ஒரு உணர்வு இருக்கும். இந்த முட்டை குழம்பை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடனும் சாப்பிடலாம்.
உங்களுக்கு இந்த மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீஅழ மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு...
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1/2 டீஸ்பூன்
* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 3
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கல்பாசி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 10 பல் (நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மட்டன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* அரைத்த மசாலா
* தண்ணீர் - தேவையான அளவு
* முட்டை - 4
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தேங்காய், சோம்பு, சீரகம், மிளகு, கசகசா,
பொட்டுக்கடலை ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, ஏலக்காய், கிரைம்பு, சோம்பு, கல்பாசி, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் பூண்டு மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மட்டன் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து, குழம்பிற்கு தேவையான அளவு
நீரை ஊற்றி நன்கு 10 நிமிடம் மூடி வைத்து பச்சை வாசனை போக கொதிக்க
வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்த பின், அதில் 4 முட்டைகளை உடைத்து ஊற்றி,
அப்படியே மூடி வைத்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 3 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான மதுரை ஸ்டைல் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
தயார்.



Click it and Unblock the Notifications
