Latest Updates
-
சூரியன் ஸ்வாதி நட்சத்திரத்திற்குள் நுழைவதால் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மீந்து போன சாதத்தை வைச்சு இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
Hair Care: இந்திய ராணிகள் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க பின்பற்றிய எளிய வழிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அனைவரின் மீதும் உண்மையான அக்கறை காட்டும் அன்பானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க சருமத்தில் அசிங்கமா தோல் உரியுதா? அப்ப இந்த நேச்சுரல் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
பூச்சி மற்றும் வண்டுகள் அரிசியை நெருங்கவே கூடாதா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை அரிசியில் போட்டு வையுங்க -
அக்டோபர் 30-ல் அஸ்தமிக்கும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்... -
கோடிகளில் விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காளான் வகைகள் - இந்த காளான்களில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
கொழுப்பு குறைய, வயிற்றுப்புண் ஆற சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பும் தெரியாது.. ருசியானதும் கூட..
ஸ்கூலுக்கு ஒருவாட்டி இப்படி குஸ்கா செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க..
Easy Lunchbox Kuska Recipe In Tamil: காலையில் லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்வதென்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? உங்கள் பிள்ளைகள் ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க சொல்கிறார்களா? உங்கள் பசங்களுக்கு பிரியாணி ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் குஸ்காவை செய்து கொடுங்கள். இப்படி குஸ்காவை செய்யும் போது, பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த குஸ்கா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். ஒருமுறை இந்த குஸ்காவை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு குஸ்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குஸ்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 2
* மராட்டி மொக்கு - 1
* ஜாவித்திரி - சிறிது
* பெரிய வெங்காயம் - 2 (மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புதினா - 1 கையளவு
* கொத்தமல்லி - 1 கையளவு
* சீரக சம்பா அரிசி - 1 கப் (1/2 மணிநேரம் ஊற வைத்தது)
* தண்ணீர் - 2 கப்
செய்முறை:
* முதலில் சீரக சம்பா அரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி,
பிரியாணி இலை, மராட்டி மொக்கு, ஜாவித்திரி சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், மல்லித் தூள்,
கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில்
வைத்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் 2 கப் நீரை ஊற்றி கிளறி, நீர் நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், சீரக சம்பா அரிசியை நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து
கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கிளறி, 1
டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.
* நீர் ஓரளவு வற்றியதும், குக்கரை மூடி, 1 விசில் விட்டு அடுப்பை
அணைத்துவிட வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து விசில் போனதும் குக்கரைத் திறந்தால், மணமணக்கும்
குஸ்கா தயார்.



Click it and Unblock the Notifications
