Latest Updates
-
கோடிகளில் விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காளான் வகைகள் - இந்த காளான்களில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
கொழுப்பு குறைய, வயிற்றுப்புண் ஆற சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பும் தெரியாது.. ருசியானதும் கூட.. -
3 தக்காளி, 5 சின்ன வெங்காயம் இருந்தா இந்த கொங்கு ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
விடாப்பிடியான வயிற்றுக் கொழுப்பை குறைக்கணுமா? அப்ப இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க.. -
தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் ஆண்ட முதல் இந்திய அரசர் யார் தெரியுமா? நீங்க நினைக்கிற அரசர் இல்ல -
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கவலைகளும், பிரச்சினைகளும் அதிகரிக்குமாம் -
நவம்பர் 02-ல் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
தீபாவளிக்கு பிறகு நடக்கப்போகும் சுக்கிர பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம்
அக்டோபர் 30-ல் அஸ்தமிக்கும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்...
Mercury Combust In Libra 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் தனது நிலையை மாற்றக்கூடியவர். தற்போது புதன் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார்.

இந்நிலையில் இந்த புதன் அக்டோபர் 30 ஆம் தேதி துலாம் ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். புதன் அஸ்தமனமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழிலிலும் நிறைய பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. இப்போது புதன் அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் புதன் அஸ்தமிக்கவுள்ளார். இதனால் இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் வியாபாரம் செய்து வந்தால், புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். வணிகர்கள் தங்கள் கூட்டாளருடன் பிரச்சனையை சந்திக்கும் வாய்ப்புள்ளது. பழைய பிரச்சனைகள் மீண்டும் எழக்கூடும். இதனால் வாழ்க்கையில் இருந்த அமைதியும், சந்தோஷமும் பாழாகும். முக்கியமாக இக்காலத்தில் மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
கடகம்
கடக ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பணம் தொடர்பான விஷயங்களில் சற்று பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். புதிய சொத்து அல்லது வீடு வாங்க நினைத்தாலோ அல்லது புதிய வாகனம் வாங்கும் எண்ணம் இருந்தால், இக்காலத்தில் அதைற்கு முயற்சித்தால் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலைக்கும் குடும்பத்திற்கும் இடையே சமநிலையை பராமரிக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடந்த காலங்களில் எடுத்த நிதி முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படலாம். சிக்கிக் கொண்ட பணத்தை திரும்பப் பெற சம்பந்தப்பட்ட நபரை சந்திக்க நேரிடும். முக்கியமாக இக்காலத்தில் யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பணம் கைக்கு கிடைக்காமல் போகலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 12 ஆவது வீட்டில் புதன் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பணம் விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பயணம் மேற்கொள்ளும் போது உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். செலவுகள் திடீரென்று அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலை மோசமடையலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் பண பரிவர்த்தனைகளின் போது கவனமாக இருக்க வேண்டும். பயணம் தொடர்பான ஆவணங்களை கையாளும் போது அவசரப்பட வேண்டாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




