கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..

Posted By:

Kovai Special Thakkali Thanni Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சட்னி தான் ரொம்ப பிடிக்குமா? அதுவும் தக்காளி சட்னி என்றால் விரும்பி சாப்பிடுவார்களா? தக்காளி சட்னியை பலவிதங்களில் செய்யலாம். ஆனால் நீங்கள் எப்போதும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னியை செய்யுங்கள். இந்த சட்னியை செய்தால் எல்லோரும் ஊற்றி ஊற்றி குடிப்பார்கள்.

How To Make Kovai Special Thakkali Thanni Chutney Recipe

உங்களுக்கு கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூடன
* வரமிளகாய் - 3
* கறிவேப்பிலை - 3 கொத்து
* பூண்டு - 10 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 3 (மெல்லியதாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 6
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் தக்காளியின் மேல் லேசாக கத்தியால் கீறி விட வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் தக்காளிகளை சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளிகளை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, மிக்சர் ஜாரில் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக தக்காளி வேக வைத்த நீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் சிறிது தக்காளி வேக வைத்த நீரை ஊற்றி, மசாலாப் பொருட்களை நன்கு பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு கிளறி, மீதமுள்ள தக்காளி வேக வைத்த நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 27, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion