Latest Updates
-
தீபாவளிக்கு பிறகு நடக்கப்போகும் சுக்கிர பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் பிரெட் வெஜ் டோஸ்ட் ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
வாஸ்து படி உப்பை சமையலறையில் எந்த இடத்தில் வைத்தால் அதிரஷ்டம் தேடிவரும் தெரியுமா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க சுவாரஸ்ய குணத்தை சொல்றோம்.. -
'கடல்களின் ராஜா' என்று அழைக்கப்படும் கடல் எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
உங்க முழங்கை, முழங்கால் கருமையை போக்கணுமா? அப்ப இந்த மாஸ்க்கை வாரத்துக்கு 3 முறை போடுங்க.. -
உருளைக்கிழங்கு வாங்குனா இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
குரு பெயர்ச்சி 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா? -
வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா துரதிர்ஷ்டம் வீட்டை வித எப்பவும் போகாதாம் -
கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
லன்ச் பாக்ஸ்-க்கு இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி கேப்பாங்க..
Kovakkai Sadam In Tamil: ஒவ்வொரு நாளும் ஸ்கூலுக்கு லன்ச்பாக்ஸில் என்ன செய்து கொடுப்பது என்று முடிவெடுப்பது பெரிய வேலையாக உள்ளதா? உங்கள் பிள்ளைகள் சற்று வித்தியாசமான, அதே சமயம் சுவையான சாதத்தை செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கோவக்காய் உள்ளதா? அப்படியானால் அவற்றைக் கொண்டு அருமையான சுவையில் கோவக்காய் சாதம் செய்து கொடுங்கள். இந்த கோவக்காய் சாதத்தின் ஸ்பெஷலே அதற்கு தனியாக மசாலா அரைத்து பொடித்து சேர்ப்பது தான். இந்த சுவையில் கோவக்காய் சாதத்தை செய்து கொடுக்கும் போது லன்ச்பாக்ஸ் வீட்டிற்கு காலியாகத் தான் வரும்.

உங்களுக்கு இந்த கோவக்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோவக்காய் சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து பொடி செய்வதற்கு...
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 1
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* வரமிளகாய் - 2
* எள்ளு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கோவக்காய் - 250 கிராம் (மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* அரைத்த பவுடர்
* சாதம் - 2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு,
உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகு, சீரகம், மல்லி, பட்டை, கிராம்பு ஆகியவற்றை
சேர்த்து வறுக்க வேண்டும்.
* பிறகு அதில் காஷ்மீரி வரமிளகாய் மற்றும் சாதாரண வரமிளகாய் சேர்த்து
வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் எள்ளு விதைகளை சேர்த்து ஒருமுறை வறுத்து இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக
அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கோவக்காய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி, மூடி வைத்து 15 நிமிடம்
மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மூடியைத் திறந்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் அரைத்து
வைத்துள்ள பொடியை சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் சாதத்தை சேர்த்து
நன்கு 3-4 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான கோவக்காய் சாதம்
தயார்.



Click it and Unblock the Notifications
