Latest Updates
-
உருளைக்கிழங்கு வாங்குனா இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
குரு பெயர்ச்சி 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா? -
வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா துரதிர்ஷ்டம் வீட்டை வித எப்பவும் போகாதாம் -
கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நெல்லை ஸ்டைல் அஞ்சு காய் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்த 6 உணவுகளை எப்பவுமே வெறுக்காதீங்க.. கூறும் டாக்டர்! எதுக்குன்னு பாருங்க.. -
இந்தியாவிற்கு 'இந்தியா' என்ற பெயர் எப்படி வந்தது? இந்த பெயர் யாரால் வைக்கப்பட்டது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
2027-ல் ஏழரை சனியால் இந்த 4 ராசிக்காரங்க அதிகமா கஷ்டப்படுவாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 தக்காளியும், 2 ஸ்பூன் பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கப் போகுதாம்
உங்க முழங்கை, முழங்கால் கருமையை போக்கணுமா? அப்ப இந்த மாஸ்க்கை வாரத்துக்கு 3 முறை போடுங்க..
Skin Care Tips In Tamil: முகத்தைப் பராமரிப்பதில் அதிக கவனத்தை செலுத்தும் மக்கள், தங்களின் முழங்கைகள் மற்றும் முழங்கால்களுக்கு பராமரிப்பு கொடுக்க தவறுகின்றனர். இப்படி இப்பகுதிகளுக்கு எவ்வித பராமரிப்பும் கொடுக்காத காரணத்தினால், இப்பகுதியானது மற்ற பகுதிகளை விட சற்று கருமையாக உள்ளது எனலாம். அதுமட்டுமின்றி, அடிக்கடி ஏற்படும் உராய்வு, வறண்ட சருமம், இறந்த சரும செல்கள் சேர்வது மற்றும் சூரிய ஒளியின் தாக்கம் போன்ற காரணங்களால் முழங்கைகள் மற்றும் முழங்கால்களின் நிறம் கருமையாகத் தோன்றலாம். சிலருக்கு ஹார்மோன் மாற்றங்கள் அல்லது குறிப்பிட்ட ஆரோக்கிய பிரச்சனைகளாலும் கருமை ஏற்படலாம்.

இப்படி முழங்கைகள் மற்றும் முழங்கால்களில் உள்ள கருமையை குறைக்க பலர் கடைகளில் விற்கப்படும் சரும பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும் இந்த சரும கருமையைப் போக்க நம் வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுக்கலாம். இப்படி இயற்கை பொருட்களைக் கொண்டு போடப்படும் நேச்சுரல் பேக்குகள் சரும வறட்சியைக் குறைத்து, சருமத்தை மென்மையாக்குவதோடு, கருமையை குறைக்கவும் உதவலாம். அதற்கு இந்த பேக்குகளை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். இப்போது முழங்கை, முழங்கால் கருமையை போக்க உதவும் சில நேச்சுரல் பேக்குகளை காண்போம்.
1. கடலை மாவு மற்றும் தயிர் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு, அத்துடன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முழங்கை மற்றும் முழங்காலில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* அதன் பின் அப்பகுதியை உலர்த்தி மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
2. தேன் மற்றும் ஓட்ஸ் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சிறிது நீரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முழங்கை மற்றும் முழங்கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு கைகளை நீரில் நனைத்து, மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* அதைத் தொடர்ந்து மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
3. கற்றாழை மற்றும் மஞ்சள் மாஸ்க்
* இந்த மாஸ்க்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முழங்கை மற்றும் முழங்காலில் தடவி 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரைப் பயன்படுத்தி மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
