கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..

Posted By:

Kalyana Veetu Pasiparuppu Carrot Poriyal Recipe in Tamil: உங்கள் வீட்டில் தினமும் ஏதாவது ஒரு பொரியலை கட்டாயம் செய்வீர்களா? அதுவும் கேரட் பொரியல் என்றால் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பிடிக்குமா? ஆனால் எப்போதும் ஒரே மாதிரி தான் இந்த கேரட் பொரியலை செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியலை செய்யுங்கள். இந்த பொரியல் சற்று வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இப்படி பொரியலை செய்யும் போது, கேரட் சாப்பிடாதவர்கள் கூட கேட்டு சாங்கி சாப்பிடுவார்கள்.

Kalyana Veetu Pasiparuppu Carrot Poriyal How To Make Marriage Style Carrot Stir fry

உங்களுக்கு இந்த கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* கேரட் - 400 கிராம் (பொடியாக நறுக்கியது)
* பாசிப்பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 டம்ளர்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* வேக வைத்த கேரட்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பை எடுத்துக் கொண்டு, நீரில் 2-3 முறை கழுவிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கேரட், கழுவி வைத்துள்ள பாசிப்பருப்பு சேர்த்து, 1 டம்ளர் நீரை ஊற்ற வேண்டும்.
* அதன் பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மிதமான தீயில் வைத்து, கேரட்டையும், பாசிப்பருப்பையும் வேக வைக்க வேண்டும்.
* கேரட்டும், பாசிப்பருப்பும் வெந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்த கேரட்டை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியல் தயார்.

[ of 5 - Users]
Story first published: Monday, October 26, 2026, 14:18 [IST]
Desktop Bottom Promotion