Latest Updates
-
இந்தியாவிற்கு 'இந்தியா' என்ற பெயர் எப்படி வந்தது? இந்த பெயர் யாரால் வைக்கப்பட்டது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
2027-ல் ஏழரை சனியால் இந்த 4 ராசிக்காரங்க அதிகமா கஷ்டப்படுவாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 தக்காளியும், 2 ஸ்பூன் பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கப் போகுதாம் -
நவம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெசிபி - இந்த தீபாவளிக்கு இதை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
2026-ல் உலகின் மிகவும் ஆபத்தான டாப் 10 நாடுகள் - இந்த நாடுகளில் மக்கள் வாழ்வதே ரொம்ப கஷ்டம் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா -
முட்டையை இந்த மாதிரி வித்தியாசமா புலாவ் செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியை விட அட்டகாசமாக இருக்கும்
இந்த 6 உணவுகளை எப்பவுமே வெறுக்காதீங்க.. கூறும் டாக்டர்! எதுக்குன்னு பாருங்க..
Healthy Foods In Tamil: நமது உடலின் சீரான செயல்பாட்டிற்கு சத்துக்கள் நிறைந்த உணவுகள் மிகவும் இன்றியமையாதது. அப்படி நாம் சாப்பிடும் உணவுகள் அனைத்துமே அனைவருக்கும் பிடித்துவிடாது, சில உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். சில உணவுகளை தவிர்த்துவிடுவார்கள். அதுவும் குறிப்பிட்ட காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், பழங்கள் போன்றவற்றை பிடிக்காது என்பதற்காக அவற்றை தவிர்ப்பார்கள். ஆனால் அப்படி தவிர்க்கும் சில உணவுகளில் உடலுக்கு வேண்டிய அரிதான மற்றும் முக்கியமான சத்துக்கள் ஏராளமான அளவில் இருக்கலாம்.

எனவே உடலுக்கு தேவையான சத்துக்களைப் பெற உணவுப் பழக்கம் மிகவும் முக்கியமானது. குறிப்பாக, சில உணவுகள் சுவை குறைவாக இருந்தாலும், அவற்றில் உடலின் சீரான செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் புரதச்சத்துகள் நிறைந்திருக்கலாம். இந்நிலையில் பிடிக்காத உணவுகளை முற்றிலும் தவிர்ப்பதற்குப் பதிலாக, அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகளை அறிந்துகொண்டு, நமக்குப் பிடித்த வகையில் சமைத்து உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
திருச்சியில் உள்ள ஸ்வேதா மருத்துவமனையின் மேம்பட்ட சிகிச்சை எண்டோஸ்கோபிஸ்ட் மற்றும் இரைப்பைக் குடலியல் நிபுணரான டாக்டர் செந்தூரன் சுகுணா நாவலடி கீர்த்தி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருபோதும் தவிர்க்கக்கூடாத டாப் 6 உணவுகள் குறித்து பகிர்ந்துள்ளார். அந்த உணவுகள் பின்வருமாறு:
1. முருங்கைக்கீரை
"முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. இந்த முருங்கைக்கீரை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய முக்கியமான சத்துக்கள் கிடைத்து, உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்." என்று டாக்டர் கூறினார். ஆனால் முருங்கைக்கீரையில் உள்ள கசப்புச்சுவையால் பலர் இதை சாப்பிட மறுப்பார்கள். நீங்களும் அப்படி இருந்தால், இனிமேல் தவறாமல் வாரம் ஒருமுறையாவது முருங்கைக்கீரையை உட்கொண்டு வாருங்கள்.
2. பீட்ரூட் பொரியல்
"பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன. இந்த நைட்ரேட்டுகள் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள பெரிதும் உதவி புரியும்." என்று டாக்டர் கூறினார். ஏனெனில் பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்டுகள் உடலினுள் செல்லும் போது நைட்ரிக் ஆக்ஸைடக மாறி இரத்த குழாய்களை தளர்வடையச் செய்கின்றன. இதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் தடையின்றி சிறப்பாக இருக்கும்.
3. சர்க்கரைவள்ளிக் கிழங்கு
"வேக வைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கும் ஒருபோதும் தவிர்க்கக்கூடாத உணவுகளுள் ஒன்று. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதன் காரணமாக நீண்ட நேரம் வயிறு நிரம்பியிருக்கும். அதோடு இந்த கிழங்கில் வைட்டமின் ஏ சத்தும் அதிகம் உள்ளது." என்று டாக்டர் கூறினார். எனவே இதுவரை சர்க்கரைவள்ளிக் கிழங்கை தவிர்த்து வந்தால், இனிமேல் சாப்பிட தொடங்குங்கள். முக்கியமாக எடையைக் குறைக்கும் டயட்டில் இருப்பவர்களுக்கு இந்த கிழங்கு மிகவும் நல்லது.
4. நெல்லிக்காய்
"நெல்லிக்காய் வைட்டமின் சி சத்தின் ஆற்றல் மையமாகும். இந்த நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்து வந்தால், இது உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, சரும ஆரோக்கியத்தையும் பராமரிக்க பெரிதும் உதவி புரியும்" என்று டாக்டர் கூறினார்.
5. கொய்யாப்பழம்
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்தும், வைட்டமின் சியும் அதிகமாக உள்ளன. அதோடு புரோட்டீனும் அதிகம் உள்ளன. எனவே இந்த கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலைத் தடுக்கலாம் என்று டாக்டர் கூறினார். முக்கியமாக கொய்யாப்பழமானது ஆப்பிளுக்கு இணையான சத்துக்களை கொண்டுள்ளது. எனவே தினமும் ஆப்பிளை வாங்கி சாப்பிட முடியாவிட்டாலும், விலைக்குறைவில் கிடைக்கும் கொய்யாப்பழத்தை வாங்கி சாப்பிடுங்கள்.
6. மாதுளை
மாதுளம் பழத்தில் உள்ள சிவப்பு முத்துக்கள் உண்மையிலேயே முத்துக்கள் தான். ஏனெனில் அந்த முத்துக்களில் ஏராளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. எனவே இந்த மாதுளையை சாப்பிட ஒருபோதும் தவிர்க்கக்கூடாது என்று டாக்டர் கூறினார். ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ரேடிக்கல்களால் செல்கள் சேதமடைவதைத் தடுத்து பாதுகாக்கும். இதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும், அழற்சி குறையும், மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
