Latest Updates
-
முட்டையை இந்த மாதிரி வித்தியாசமா புலாவ் செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியை விட அட்டகாசமாக இருக்கும் -
இந்திய சினிமாவின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் நகரம் எது? இந்திய சினிமாவின் தந்தை யார் தெரியுமா? -
1/2 கிலோ மட்டன் வாங்குனா இந்த மாதிரி கிராமத்து ஸ்டைலில் பச்சை மிளகாய் தொக்கு செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
3/4 கிலோ சிக்கனை வாங்குனா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
அக்டோபர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணம் கொட்டும் அதிர்ஷ்ட நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (25 October 2026-31 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
Aippasi Annabhishekam 2026: ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று சிவனுக்கு எந்தெந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம்? -
குரு பெயர்ச்சி 2026: கடகம், சிம்மம், கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா? -
தலைமுடி எலிவால் மாதிரி இருக்கா? அப்ப இந்த விளக்கெண்ணெய் ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
November 2026 Lucky Zodiac Signs: நவம்பர் மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்ப அதிர்ஷ்டமானதா இருக்கும்...
சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா
சூரியன் நவகிரகங்களின் ராஜாவாக அறியப்படுகிறார். ஜோதிடத்தில் ஆற்றல், அங்கீகாரம், தலைமைத்துவம் மாற்றம் அதிகாரத்தின் அதிபதியாக சூரிய பகவான் கருதப்படுகிறார். சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றுகிறார். தற்போது சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசியில் இருக்கும் சூரியன் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு இடம்பெயரப் போகிறார்.

சூரியன் செய்வாயால் ஆளப்படும் விருச்சிக ராசிக்குள் நுழைவது ஜோதிடரீதியாக மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் தாக்கம் அணைத்த ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பிரதிபலித்தாலும் சில ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் திருப்பு முனையாக இருக்கப்போகிறது. அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் சாதகமான பலன்களை அனுபவிக்கப்பிக்கிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த கிரக மாற்றத்தால் சிறப்பான நன்மைகளை அனுபவிக்கப்போகிறார்கள், இந்த கிரக மாற்றத்தின் போது அவர்கள் தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளைப் பெறக்கூடும். தற்போது வேளையில் இருப்பவர்கள் வேலையை மாற்றுவதற்கு இது சிறந்த காலமாக இருக்கும். தற்போது பணிபுரியும் இடத்தில் உங்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம் அல்லது பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் முனைவோருக்கு இது மிகவும் சாதகமான காலகட்டமாக அமையும். முதலீடுகளைக் கையாளும் போது கவனமாக இருக்கவும். ஒரே நேரத்தில் அதிகப்படியான பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சூரிய பெயர்ச்சிக்குப் பிறகு அடுத்த 30 நாட்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கையை அனுபவிப்பார்கள். நீங்கள் உங்கள் இலக்குகளில் அதிக கவனம் செலுத்தி, உங்கள் சக ஊழியர்களையும், மேலதிகாரிகளையும் எளிதில் கவருவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பணிகளிலும் வெற்றி பெறுவதுடன், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வேலைகளை இப்போது வெற்றிகரமாக முடிக்கலாம். வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் புதிய திட்டங்கள் மூலம் தங்கள் வணிகத்தை விரிவுபடுத்துவார்கள். இதனால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும், அதேசமயம் உங்கள் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி நேர்மறையான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த மாற்றத்தால் எதிர்பாராத நேர்மறையானமாற்றங்களுடன் திடீர் நிதி நன்மைகளும் தேடிவரும். நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரலாம். அவர்களின் முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்டலாம். வீட்டில் சுப காரியங்களில் நடப்பதற்கும், குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுவதற்கும் இது ஒரு நல்ல காலமாக இருக்கும். இந்த கிரக மாற்றத்தால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான பலன்களை அடைய முடியும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன, மேலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
சிம்மம்
சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக இருப்பதால், இந்த கிரகப் பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். உங்கள் திறமைகளையும் தலைமைத்துவப் பண்புகளையும் அனைவருக்கும் வெளிப்படுத்த அற்புதமான வாய்ப்புகள் உங்களுக்குக் கிடைக்கும். இந்த பெயர்ச்சியால் வழக்கத்தை விட வேலையில் அதிக கவனத்தை செலுத்துவார்கள். இதன் மூலம் பல நன்மைகளையும் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் அவர்களின் புத்திக்கூர்மை அதிகரிக்கும். பணியிடத்தில் அவர்களின் செயல்திறனில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
வணிகர்கள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

