டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏன் அனைத்து நாட்டு வீரர்களும் வெள்ளை நிற ஜெர்சியை மட்டும் அணிகிறார்கள் தெரியுமா?

இந்தியாவில் மற்ற எந்த விளையாட்டையும் விட கிரிக்கெட் விளையாட்டுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. ஒரு நாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட் கிரிக்கெட் என கிரிக்கெட் பல வடிவங்களுக்கு மாறிவிட்டது.

Why Do Cricket Players Wear Whites in Test Matches

கிரிக்கெட் பல வடிவங்களில் மாறினாலும் அதில் சில விஷயங்கள் மட்டும் எப்போதும் மாறாமல் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் போது வீரர்கள் வெள்ளை நிற உடை அணிவது. டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் மைதானத்தில் எப்போதும் வெள்ளை நிற சீருடையையே அணிகிறார்கள். பல தசாப்தங்களாக மாறாத இந்த ஆடை விதிக்கு ஆழமான வரலாற்று, அறிவியல் மற்றும் நடைமுறை சார்ந்த காரணங்கள் உள்ளன. விக்டோரியன் காலத்து இந்த பழங்கால மரபு, இன்றும் பின்பற்றப்பட்டு வருவதற்கான காரணங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

டெஸ்ட் போட்டிகளில் ஏன் வெள்ளை நிற ஆடைகள் மட்டுமே அணியப்படுகிறது?

எந்த நாட்டு கிரிக்கெட் அணியாக இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட் அணிகள் எப்போதும் வெள்ளை நிற சீருடைகளையே அணிவதை நாம் நீண்ட காலமாக பார்த்து வருகிறோம். ஒருநாள் (ODI) மற்றும் டி20 (T20) போட்டிகளில் வீரர்கள் பல்வேறு நிறத்திலான சீருடைகளை அணிகிறார்கள், ஆனால் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் அனைத்து நாடுகளும் வெள்ளை நிறத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த ஒரே நிற தேர்வுக்கு வரலாற்றுப் பின்னணி, வானிலை மற்றும் பாரம்பரியம் சார்ந்த காரணங்கள் உள்ளன.

வானிலை

டெஸ்ட் கிரிக்கெட் என்பது மற்ற கிரிக்கெட் போட்டிகளைப் போல ஒரு நாளிலோ அல்லது சில மணி நேரங்களிலோ முடிந்து விடுவதில்லை, இது ஐந்து நாட்கள் வரை நீடிக்கும் ஒரு நீண்ட விளையாட்டாகும். இங்கிலாந்தில் இந்த விளையாட்டு முதன்முதலில் தொடங்கப்பட்டபோது, ​​வீரர்கள் பல நாட்களாகக் கடுமையான வெயிலில் நின்று விளையாட வேண்டியிருந்தது. நிரூபிக்க ஆய்வுகளின் படி, வெள்ளை நிறம் சூரிய ஒளியைத் தன்னுள் ஈர்த்துக்கொள்ளாமல், அதைத் திருப்புகிறது. இதனால் வீரர்கள் அதிகப்படியாக வியர்ப்பதைத் தடுத்து, அவர்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

விக்டோரியன் காலத்து மரபு

டெஸ்ட் கிரிக்கெட் 19-ஆம் நூற்றாண்டில், விக்டோரியன் காலத்தில் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில் , வெள்ளை நிறம் செல்வாக்கு மற்றும் கண்ணியத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. இந்த ஜென்டில்மேன் விளையாட்டு, குளிர்ச்சியான மற்றும் இதமான உணர்வைத் தரும் என்பதால், வெள்ளை நிறத்தைத் தனது அடையாளமாக ஏற்றுக்கொண்டது. 1877-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி முதலே, இந்த மரபு இன்றும் பெருமையுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

சிவப்பு பந்து

டெஸ்ட் போட்டிகளில் பாரம்பரியமாக சிவப்பு நிற கிரிக்கெட் பந்து பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை நிற ஆடைகள், பேட்ஸ் மேன், விக்கெட் கீப்பர் மற்றும் பீல்டர்கள் ஆடுகளத்தில் சிவப்புப் பந்தைத் தெளிவாகக் பார்க்க உதவுகின்றன. இந்தத் தெளிவான வேறுபாடு, வீரர்கள் பந்தைப் பிடிப்பதையும், பீல்டிங் செய்வதையும் மிகவும் எளிதாக்குகிறது.

இன்றும் தொடரும் மரபு

வெள்ளை சீருடை என்பது வெறும் பழமையான மரபு மட்டுமல்ல. இது வீரர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், நிலவும் வானிலைக்கு ஏற்றவாறு இருக்கவும், விளையாட்டின் ஒட்டுமொத்த தரத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இத்தகைய பாரம்பரியமான உடை நடை இன்றும் பெருமையுடன் பின்பற்றப்படுகிறது.

Story first published: Friday, October 23, 2026, 10:47 [IST]
Desktop Bottom Promotion