Latest Updates
-
2 தக்காளியும், 2 ஸ்பூன் பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கப் போகுதாம் -
நவம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெசிபி - இந்த தீபாவளிக்கு இதை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
2026-ல் உலகின் மிகவும் ஆபத்தான டாப் 10 நாடுகள் - இந்த நாடுகளில் மக்கள் வாழ்வதே ரொம்ப கஷ்டம் -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? வரப்போற வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
சூரியன் விருச்சிக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா -
முட்டையை இந்த மாதிரி வித்தியாசமா புலாவ் செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியை விட அட்டகாசமாக இருக்கும் -
இந்திய சினிமாவின் பிறப்பிடம் என்று அழைக்கப்படும் நகரம் எது? இந்திய சினிமாவின் தந்தை யார் தெரியுமா? -
1/2 கிலோ மட்டன் வாங்குனா இந்த மாதிரி கிராமத்து ஸ்டைலில் பச்சை மிளகாய் தொக்கு செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும்
2027-ல் ஏழரை சனியால் இந்த 4 ராசிக்காரங்க அதிகமா கஷ்டப்படுவாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா?
Elarai Shani 2027: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களின் நிலைகள் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுவும் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியான சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார்.
தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் சனி பகவான் இருப்பதால் 2026 ஆம் ஆண்டில் சில ராசிக்காரர்கள் ஏழரை சனியால் பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக ஆரோக்கியம் மற்றும் தொழிலில் பிரச்சனைகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்நிலையில் 2027 ஆம் ஆண்டில் சனி பகவான் ராசியை மாற்றவுள்ளார். அப்போது சனி பகவானின் நிலையில் ஏற்படும் மாற்றத்தால் எந்த ராசிக்காரர்கள் ஏழரை சனியால் அவதிப்படுவார்கள் என்பதை இப்போது காண்போம். உங்கள் ராசி இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
2027-ல் ஏழரை சனியால் பாதிக்கப்படும் ராசிகள்
ஜோதிடத்தின் படி, 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் மீன ராசியில் பயணிப்பதால், கும்பம், மீனம், மேஷம் ஆகிய ராசிக்காரர்கள் ஏழரை சனியின் வெவ்வேறு கட்டங்களால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஜூன் 02 ஆம் தேதி சனி பகவான் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. அதே வேளையில் கும்ப ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுவார்கள்.
இருப்பினும் அக்டோபர் 20 ஆம் தேதி சனி பகவான் மீண்டும் வக்ர கதியில் மீன ராசிக்கு செல்வதால், கும்ப ராசிக்காரர்களின் வாழ்வில் மீண்டும் ஏழரை சனியின் தாக்கம் காணப்படும். மொத்தத்தில் 2027 ஆம் ஆண்டின் சனி பகவானின் நிலையால் கும்பம், மீனம், மேஷம், ரிஷபம் ஆகிய 4 ராசிக்காரர்கள் ஏழரை சனியால் சிரமப்படுவார்கள். அதுவும் எப்படிப்பட்ட தாக்கம் காணப்படும் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் 2027 ஆம் ஆண்டின் ஏழரை சனியால் நடத்தை மற்றும் முடிவுகளில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். முக்கியமாக பண விஷயங்களில் எந்த ஒரு ரிஸ்க் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். மேலும் எந்த ஒரு புதிய முதலீடுகளை செய்யும் முன்பும், நன்றாக சிந்தித்து செயல்படுங்கள். அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்தையும் செய்வதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால் இழப்புகள் தான் மிஞ்சும்.
ரிஷபம்
2027 ஆம் ஆண்டின் ஏழரை சனியின் முதல் கட்டம் தொடங்குகிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் பிரச்சனைகளைத் தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் உங்களின் பொறுப்புக்களை தீவிரமாக எடுத்துக் கொண்டு தைரியமாக முன்னேறினால், நல்ல பலன்களைப் பெறலாம்.
கும்பம்
2027 ஆம் ஆண்டில் சனி பகவானின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்கள் வேலையில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். எந்த ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் போதும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மீனம்
2027 ஆம் ஆண்டில் ஏழரை சனியின் தாக்கத்தினால் மீன ராசிக்காரர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் பொறுப்புடன் இருக்க வேண்டும். குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளும் போது இனிமையாக நடந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்காமல், பொறுமையாக யோசித்து முடிவெடுங்கள். இதன் மூலம் நல்ல பலன் கிடைக்கலாம். ஆனால் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications




