Latest Updates
-
வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா துரதிர்ஷ்டம் வீட்டை வித எப்பவும் போகாதாம் -
கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நெல்லை ஸ்டைல் அஞ்சு காய் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும் -
இந்த 6 உணவுகளை எப்பவுமே வெறுக்காதீங்க.. கூறும் டாக்டர்! எதுக்குன்னு பாருங்க.. -
இந்தியாவிற்கு 'இந்தியா' என்ற பெயர் எப்படி வந்தது? இந்த பெயர் யாரால் வைக்கப்பட்டது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
2027-ல் ஏழரை சனியால் இந்த 4 ராசிக்காரங்க அதிகமா கஷ்டப்படுவாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 தக்காளியும், 2 ஸ்பூன் பொட்டுக்கடலையும் இருந்தா.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
அக்டோபர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கப் போகுதாம் -
நவம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உருளைக்கிழங்கு குலாப் ஜாமூன் ரெசிபி - இந்த தீபாவளிக்கு இதை செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
குரு பெயர்ச்சி 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா?
Athisara Guru Peyarchi Palan 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டு காலம் வரை பயணிப்பார். சில சமயங்களில் அவர் அதிசாரமாக குறுகிய காலத்தில் ராசியை மாற்றுவார். அந்த வகையில் தற்போது குரு பகவான் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.

குரு பகவானின் இந்த அதிசார பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும். இந்நிலையில் குரு பகவானின் பயணம் மற்றும் பார்வையால் துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து ஜோதிடர் ஜெயலட்சுமி அவர்கள் தமிழ் போல்ட்ஸ்கையுடன் பகிர்ந்து கொண்டார்.
துலாம்
சுக்கிர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே! சுப கிரகமான குரு பகவான் உங்க ராசிக்கு லாப ஸ்தானம் என்று சொல்லப்படும் மூத்த சகோதரம், லாபம் ஆகியவற்றை குறிக்கும் 11 ஆம் வீட்டில் பயணிக்கப்போவதால், நீண்ட நாள் கனவுகள் நனவாகும். தொட்டதெல்லாம் பொன்னாகும்.
குரு பகவானின் பயணம் போல பார்வையும் அற்புதமான இடங்களின் மீது விழுகிறது. உங்களுக்கு பொறுப்புகள் கூடும். பதவிகள் தேடி வரும். கனவுகள் பூர்த்தியாகும். திருமணமாகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பிர்கள். இந்த கால கட்டத்தில் நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள்.
குருவின் பார்வை உங்க ராசிக்கு, முயற்சி ஸ்தானமான முன்றாம் வீட்டின் மீது விழுகிறது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். அதே போல பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை குரு பகவான் பார்க்கிறார். நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு, மரியாதை, ஊதிய உயர்வு, தலைமை பொறுப்பு தேடி வர வாய்ப்பு உள்ளது.
உங்க ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தை குருபகவான் பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வத்தின் ஆசி கிடைக்கும். நோய்கள் நீங்கி ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாழக்கிழமையில் முருகப்பெருமானையும் தட்சிணாமுர்த்தியையும் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லதே நடக்கும்.
விருச்சிகம்
செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே! பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்யப்போவது உங்களுக்கு சாதகமாக நல்ல பலனை கொடுக்கப்போகிறது. பத்தில் குரு வந்தால் பதவி நாசம் என்பார்கள். தனகாரகன் குரு 10 ஆம் வீட்டிற்கு வந்து 2, 4, 6, ஆகிய வீடுகளை பார்க்கிறார்.
குரு பகவான் குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொல்லும் செயலும் நிறைவேறும். இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விடலாம். பணம், பொன்பொருள் சேர்க்கை ஏற்படும். மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள். வர வேண்டிய பாக்கிகள் வசூல் ஆகும். புதிய முயற்சிகள் கை கூடும்.
குரு பகவான் தன்னுடைய ஏழாம் பார்வையால் நான்காம் வீட்டினை பார்வையிடுவததால் புதிய வீடு கட்டி குடியேறலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும்.
குரு பகவான் தன்னுடைய 9 ஆம் பார்வையாக ஆறாம் வீட்டினை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள். தொழில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். சிவன்கோயிலில் உள்ள தட்சிணாமுர்த்தி மற்றும் நவகிரக சன்னதியில் உள்ள குருபகவானை வியாழக்கிழமை தரிசனம் செய்வது நன்மையை கொடுக்கும்.
தனுசு
உங்க ராசி அதிபதி குரு பகவான் பாக்ய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்று சொல்வார்கள். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குரு பகவான் உங்களுடைய ராசியை பார்வையிடப் போகிறார். இதுநாள் வரை இருந்த பிரச்சினைகளில் இருந்து முற்றிலும் விடுபடுவீர்கள். நீண்ட காலமாக வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புதிய முயற்சிகள் கைகூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சுபமாக முடியும்.
மூன்றாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும்.
ராசிக்கு 5 ஆம் வீடான பூர்வபூண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் புத்திர பாக்கியம் கிடைக்கும். உற்றார் உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும் பொருளாதார நிலை மேம்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். சனிக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



