Latest Updates
-
லன்ச் பாக்ஸ்-க்கு இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி கேப்பாங்க.. -
வாஸ்து படி உப்பை சமையலறையில் எந்த இடத்தில் வைத்தால் அதிரஷ்டம் தேடிவரும் தெரியுமா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க சுவாரஸ்ய குணத்தை சொல்றோம்.. -
'கடல்களின் ராஜா' என்று அழைக்கப்படும் கடல் எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
உங்க முழங்கை, முழங்கால் கருமையை போக்கணுமா? அப்ப இந்த மாஸ்க்கை வாரத்துக்கு 3 முறை போடுங்க.. -
உருளைக்கிழங்கு வாங்குனா இந்த மாதிரி பஞ்சாபி ஸ்டைலில் வறுவல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
குரு பெயர்ச்சி 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு எப்படி இருக்கப்போகுது-ன்னு தெரியுமா? -
வீட்டில் விளக்கேற்றும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க - இல்லனா துரதிர்ஷ்டம் வீட்டை வித எப்பவும் போகாதாம் -
கல்யாண வீட்டு பாசிப்பருப்பு கேரட் பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நெல்லை ஸ்டைல் அஞ்சு காய் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும்
ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் பிரெட் வெஜ் டோஸ்ட் ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சூப்பர் டிபனா இருக்கும்
Bread Vegetable Toast Recipe in Tamil: காலையில் இட்லி, தோசை அல்லது சப்பாத்தி என்று ஒரே மாதிரியான காலை உணவு சாப்பிட்டு போரடித்து விட்டதா? கொஞ்சம் வித்தியாசமான அதேசமயம் சுவையான காலை உணவை செய்ய விரும்புறீங்களா? உங்கள் வீட்டில் பிரெட்டும், உருளைக்கிழங்கும் உள்ளதா? அப்படியென்றால் ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் பிரெட் வெஜிடபிள் டோஸ்ட் செஞ்சு பாருங்க.

இந்த டோஸ்ட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை காலை டிபனாக மட்டுமின்றி மாலை நேர ஸ்னாக்ஸாகவும் சாப்பிடலாம். மேலும் இதை செய்வது மிகவும் சுலபமானதாகும். இந்த வெஜிடபிள் டோஸ்ட் செய்ய மைக்ரோவேவ் ஓவன் வேண்டுமென்ற அவசியமில்லை. எளிதாக தோசைக்கல்லிலேயே செய்யலாம்.
உங்களுக்கு இந்த ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் வெஜிடபிள் டோஸ்ட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே இந்த வெஜிடபிள் பிரெட் டோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 10 பிரெட் துண்டுகள்
- 1 பெரிய வெங்காயம்
- 2 உருளைக்கிழங்கு
- 1 சிறிய தக்காளி
- 1 சிறிய குடைமிளகாய்
- 2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி
- 1 சிறிய கேரட்
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்
மசாலாப் பொடி:
- 1 ஸ்பூன் மல்லித்தூள்
- 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 சிட்டிகை மஞ்சள் தூள்
பிற பொருட்கள்:
- அரை ஸ்பூன் உப்பு
- 1 ஸ்பூன் எள்
- 5 ஸ்பூன் தக்காளி கெட்ச்அப்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 2 ஸ்பூன் வெண்ணெய்
செய்முறை:
- உருளைக்கிழங்குகளை பிரஷர் குக்கரில் போட்டு, 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும். நீராவி முழுமையாக அடங்கியதும், உருளைக்கிழங்குகளை வெளியே எடுத்து, அதன் தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு அதையும் பொடியாக நறுக்கவும். கொத்தமல்லி இலைகளையும் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய வெங்காயம் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளி, கேரட் மற்றும் குடைமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து, மிதமான தீயில் 5-6 நிமிடங்கள் வதக்கவும்.
- அதன்பின் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து, காய்கறிகளுடன் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும். இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
- ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் ஒரு டீஸ்பூன் தக்காளி கெட்ச்அப் தடவி, பிரட் முழுவதும் சீராகப் பரப்பவும். அதன் மேல் ஒரு டீஸ்பூன் வெஜிடபிள் மசாலாவை வைத்து, ஓரங்கள் வரை நன்றாகப் பரப்பவும்.
- ஒரு கத்தியைப் பயன்படுத்தி, பிரட் துண்டை முக்கோணமாக நறுக்கவும். இப்போது இந்த வெஜிடபிள் மசாலா பிரட் துண்டுகளை ஒரு தோசைக்கல்லில் வைத்து டோஸ்ட் செய்ய வேண்டும்.
- தோசைக்கல்லைச் சூடாக்கி, அதில் ¼ டீஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும். அதன் மேல் ஒரு முக்கோண பிரட் துண்டை வைக்கவும்.
- மீண்டும் சிறிது வெண்ணெய் சேர்த்து, மற்றொரு முக்கோண பிரட் துண்டையும் வைக்கவும். குறைந்த தீயில், ஒரு பக்கம் மொறுமொறுப்பாகும் வரை பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்யவும்.
- பிறகு, மீண்டும் சிறிது வெண்ணெய் சேர்த்து, பிரட் துண்டுகளைத் திருப்பி மறுபக்கமும் டோஸ்ட் செய்யவும்.
- டோஸ்ட் செய்த பிரட் துண்டுகளைத் தவாவிலிருந்து எடுத்துவிட்டு, இதே முறையில் மீதமுள்ள மசாலாவைப் பயன்படுத்தி மற்ற பிரட் துண்டுகளையும் தயார் செய்யவும்.
- அவ்வளவுதான் சூப்பரான ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் பிரெட் டோஸ்ட் ரெடி!



Click it and Unblock the Notifications
