நவம்பர் 02-ல் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!

Gajkesari Yog On 02 November 2026: ஜோதிடத்தின் படி, தேவர்களின் குருவாக கருதப்படும் குரு பகவான் அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியை விட்டு வெளியேறி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அதைத் தொடர்ந்து மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் நவம்பர் 02 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் சிம்ம ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் உருவாவது தான் கஜகேசரி யோகம்.

Gajkesari Yog On 02 November 2026 These Zodiac Signs Will Be Lucky

ஜோதிடத்தில் இந்த யோகமானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது நவம்பர் மாதத்தில் தொடக்கத்தில் குரு சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி யோகத்தால் அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இதனால் புரிந்துகொள்ளும் திறனும் முடிவெடுக்கும் திறனும் மேம்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். உங்களின் சிறப்பான செயல்திறன் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்பட்டு நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் பேச்சுத்திறன் ஈர்க்கும் வகையில் இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பரம்பரை தொழிலை செய்பவர்களுக்கு வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். முன்பை விட அதிக உற்சாகத்துடன் பணியிடத்தில் சிறப்பாக பொறுப்புக்களை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், இக்காலம் அதை தொடங்க உகந்ததாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இக்காலம் இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கும் வாய்ப்புள்ளது.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 10 ஆவது வீட்டில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் உள்ள பிரச்சனைகள் குறைவதற்கும், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, அன்றாட வழக்கங்கள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, October 26, 2026, 23:41 [IST]
Desktop Bottom Promotion