Latest Updates
-
தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் ஆண்ட முதல் இந்திய அரசர் யார் தெரியுமா? நீங்க நினைக்கிற அரசர் இல்ல -
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கவலைகளும், பிரச்சினைகளும் அதிகரிக்குமாம் -
நவம்பர் 02-ல் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
தீபாவளிக்கு பிறகு நடக்கப்போகும் சுக்கிர பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் பிரெட் வெஜ் டோஸ்ட் ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி கேப்பாங்க.. -
வாஸ்து படி உப்பை சமையலறையில் எந்த இடத்தில் வைத்தால் அதிரஷ்டம் தேடிவரும் தெரியுமா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க சுவாரஸ்ய குணத்தை சொல்றோம்..
விடாப்பிடியான வயிற்றுக் கொழுப்பை குறைக்கணுமா? அப்ப இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க..
Belly Fat Burning Drinks In Tamil: இன்று நிறைய பேர் சிரமப்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான் தொப்பை. நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, உடற்பயிற்சியின்மை, அதிக கலோரி கொண்ட உணவுகளைச் சாப்பிடுவது, போதிய தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் போன்ற பல காரணிகள் ஒருவருக்கு தொப்பை வருவதற்கு பங்களிக்கலாம். அதுவும் வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகம் தேங்குவது உடல் தோற்றத்தை மட்டுமல்லாமல், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்துடனும் தொடர்புடையதாக இருக்கலாம். எனவே, தொப்பைக் கொழுப்பைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியம்.

இந்த தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான டயட்டை பின்பற்றுவதோடு, கொழுப்பைக் குறைக்க உதவும் பானங்களையும் தேர்ந்தெடுத்து உட்கொள்கின்றனர். ஆனால் எந்த ஒரு பானமும் தொப்பையை குறைத்துவிடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் சில பானங்களை குடித்து வருவது, உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தக்கூடும். அதுவும் இந்த பானங்களுடன் ஆரோக்கியமான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், தொப்பையில் மாற்றத்தைக் காணலாம். இப்போது தொப்பையைக் குறைக்க உதவி புரியும் சில பானங்களைக் காண்போம்.
1. சீரகத் தண்ணீர்
சீரகத்தை இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் காபி, டீ-க்கு பதிலாக குடிக்கலாம். இதன் மூலம் செரிமானம் மேம்படும், பசி கட்டுப்படும், இரத்த சர்க்கரை அளவு சீராகும், உடல் கொழுப்பு கட்டுப்படும்.
2. எலுமிச்சை இஞ்சி நீர்
சிறிது இஞ்சியை எடுத்து தட்டி, கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்த வடிகட்டி, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இந்த பானம் செரிமான நொதிகளைத் தூண்டி, வாயுவைக் குறைத்து, உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும்.
3. க்ரீன் டீ
உடல் எடையைக் குறைக்க உதவும் பானங்களில் மிகவும் பிரபலமான ஒன்று தான் க்ரீன் டீ. ஏனெனில் க்ரீன் டீயில் கொழுப்பு எரிப்பதை அதிகரிக்கும் சேர்மங்களான கேட்டசின்கள் உள்ளன. எனவே தொப்பை அல்லது உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் பால் டீக்கு பதிலாக, இந்த க்ரீன் டீயைக் குடித்து வந்தால், எடை குறைய உதவியாக இருக்கும்.
4. சோம்பு நீர்
நல்ல சூடான நீரில் சோம்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி, காலையில் எழுந்ததும் அந்த நீரை வெறும் வயிற்றில் குடியுங்கள். இது செரிமானத்தை மேம்படுத்தி, வயிற்று உப்புசம் மற்றும் நீர் தேக்கத்தைக் குறைப்பதன் மூலமும் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
5. மஞ்சள் பால்
மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை உடலினுள் அழற்சி அல்லது வீக்கத்தைக் குறைப்பதோடு, கொழுப்பு சேமிப்பை ஒழுங்குபடுத்துகிறது. எனவே உடல் கொழுப்பை குறைக்க நினைத்தால், மஞ்சள் கலந்த பாலை இரவு தூங்கும் முன் குடித்து வாருங்கள். இதன் மூலம் நல்ல தூக்கம் கிடைப்பதோடு, நச்சு நீக்கத்திற்கும் உதவுகிறது.
6. மோர்
மோர் அதிகப்படியான கலோரிகள் இல்லாமல் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் இது எடை இழப்புக்கும் உதவுகிறது. அதுவும் இதில் புரோட்டீன் இருப்பதால், அது வயிறு நிறைந்த உணர்வைத் தருவதோடு, தேவையற்ற பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே மதிய உணவுக்கு பின் அல்லது காலை உணவுக்கு பின் பசி எடுப்பது போன்று இருந்தால், அப்போது கண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு டம்ளர் மோர் குடியுங்கள்.
இந்த பானங்களை எப்போது குடிப்பது நல்லது?
மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை வெறும் வயிற்றில் குடிக்கும் போது நல்ல பலனைத் தரும். அதுவும் சீரக நீர், இஞ்சி எலுமிச்சை நீர், சோம்பு நீர் போன்றவற்றை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்கலாம். க்ரீன் டீ காலை உணவுக்கு பின் குடிக்கலாம். மஞ்சள் பாலை மாலை வேளைகளில் அல்லது இரவு நேரங்களில் குடிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
