Latest Updates
-
கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கவலைகளும், பிரச்சினைகளும் அதிகரிக்குமாம் -
நவம்பர் 02-ல் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
தீபாவளிக்கு பிறகு நடக்கப்போகும் சுக்கிர பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் பிரெட் வெஜ் டோஸ்ட் ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி கேப்பாங்க.. -
வாஸ்து படி உப்பை சமையலறையில் எந்த இடத்தில் வைத்தால் அதிரஷ்டம் தேடிவரும் தெரியுமா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க சுவாரஸ்ய குணத்தை சொல்றோம்.. -
'கடல்களின் ராஜா' என்று அழைக்கப்படும் கடல் எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
உங்க முழங்கை, முழங்கால் கருமையை போக்கணுமா? அப்ப இந்த மாஸ்க்கை வாரத்துக்கு 3 முறை போடுங்க..
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
Sun Transit In Scorpio 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஆன்மா, தன்னம்பிக்கை, ஆற்றல், கௌரவம் மற்றும் தந்தை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன், மாதம் ஒருமுறை ராசியை மாற்றி, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துவார். அந்த வகையில் நவம்பர் மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் இருந்து வெளியேறி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.

அதுவும் இந்த சூரிய பெயர்ச்சியானது நவம்பர் 16 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த ராசியில் சூரியன் டிசம்பர் 16 ஆம் தேதி வரை இருப்பார். சூரியனின் இந்த பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இப்போது நவம்பர் மாதத்தில் நடக்கும் சூரிய பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் குறைந்து, நல்ல மாற்றங்கள் ஏற்படும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய வருமான வழிகள் உருவாகும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியானது மங்களகரமானதாக இருக்கும். அதுவும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கும் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கலாம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில் இந்த சூரிய பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். சிலருக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தரை சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
