Latest Updates
-
3 தக்காளி, 5 சின்ன வெங்காயம் இருந்தா இந்த கொங்கு ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும் -
விடாப்பிடியான வயிற்றுக் கொழுப்பை குறைக்கணுமா? அப்ப இந்த பானங்களை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க.. -
தென்னிந்தியாவையும், வட இந்தியாவையும் ஆண்ட முதல் இந்திய அரசர் யார் தெரியுமா? நீங்க நினைக்கிற அரசர் இல்ல -
நவம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா? -
கோவை ஸ்பெஷல் தக்காளி தண்ணி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கவலைகளும், பிரச்சினைகளும் அதிகரிக்குமாம் -
நவம்பர் 02-ல் உருவாகும் கஜகேசரி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
தீபாவளிக்கு பிறகு நடக்கப்போகும் சுக்கிர பெயர்ச்சி இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஐயங்கார் பேக்கரி ஸ்டைல் பிரெட் வெஜ் டோஸ்ட் ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
லன்ச் பாக்ஸ்-க்கு இந்த கோவக்காய் சாதம் செஞ்சு குடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி கேப்பாங்க..
கொழுப்பு குறைய, வயிற்றுப்புண் ஆற சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பும் தெரியாது.. ருசியானதும் கூட..
Sundakkai Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் யாரும் சுண்டக்காய் சாப்பிடமாட்டார்களா? எப்போது சுண்டக்காய் செய்தாலும், அதை நீங்கள் மட்டும் தான் சாப்பிடுவீர்களா? இதற்கு அதன் கசப்புச்சுவை தான் காரணம். ஆனால் இந்த கசப்புச்சுவை தெரியாமலேயே அருமையான சுவையில் சுண்டக்காயை சமைக்கலாம். இதுவரை நீங்கள் சுண்டக்காயைக் கொண்டு புளிக்குழம்பு தான் செய்திருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு இந்த பக்குவத்தில் பொரியல் செய்தால், சுண்டக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு இந்த சுண்டக்காய் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சுண்டக்காய் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சுண்டக்காய் - 200 கிராம்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* குழம்பு மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சுண்டக்காயை தட்டி நீரில் போட்டு 2 முறை அலசி, தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சுண்டக்காயை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் உப்பு
சேர்த்து நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூளை சேர்த்து குறைவான தீயில் வைத்து
நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் சுண்டக்காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி,
மூடி வைத்து 10-15 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். முக்கியமாக
அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* சுண்டக்காய் நன்கு வெந்து நீர் வற்றியதும், அதில் கொத்தமல்லியைத்
தூவி கிளறி இறக்கினால், சுவையான சுண்டக்காய் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications
