Latest Updates
-
ஸ்கூலுக்கு ஒருவாட்டி இப்படி குஸ்கா செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
Hair Care: இந்திய ராணிகள் முடியை ஆரோக்கியமாக பராமரிக்க பின்பற்றிய எளிய வழிகள் என்னென்ன தெரியுமா? -
உங்க வீட்டில் பணம் தங்கமாட்டீங்குதா? அப்ப பணம் வெக்குற இடத்துல இந்த பொருட்களை வெக்காதீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அனைவரின் மீதும் உண்மையான அக்கறை காட்டும் அன்பானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
உங்க சருமத்தில் அசிங்கமா தோல் உரியுதா? அப்ப இந்த நேச்சுரல் ஸ்க்ரப்பை யூஸ் பண்ணுங்க.. -
பூச்சி மற்றும் வண்டுகள் அரிசியை நெருங்கவே கூடாதா? அப்ப இந்த பொருட்களில் ஒன்றை அரிசியில் போட்டு வையுங்க -
அக்டோபர் 30-ல் அஸ்தமிக்கும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்... -
கோடிகளில் விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காளான் வகைகள் - இந்த காளான்களில் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? -
கொழுப்பு குறைய, வயிற்றுப்புண் ஆற சுண்டக்காயை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. கசப்பும் தெரியாது.. ருசியானதும் கூட.. -
3 தக்காளி, 5 சின்ன வெங்காயம் இருந்தா இந்த கொங்கு ஸ்டைல் வெள்ளை குருமாவை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும்
மீந்து போன சாதத்தை வைச்சு இந்த மாதிரி டிபன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும்
Leftover Rice Adai Recipe in Tamil: தினமும் ஒரே மாதிரியான காலை டிபனை சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், ஒரு ஈஸியான டிபனை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? இந்த அடை செய்வதற்கு மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியமில்லை, மீந்து போன சாதமிருந்தாலே போதும். உங்கள் வீட்டில் மீந்து போன சாதம் அதிகமா இருக்கா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு அட்டகாசமான சுவையில் அடை செய்யுங்கள்.

இந்த அடையை காலை உணவாக மட்டுமின்றி, இரவு உணவாகவும் சாப்பிடலாம். முக்கியமாக இந்த அடைக்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவையில்லை. அப்படியே கூட சாப்பிடலாம். ஒருவேளை நீங்கள் சைடிஷ் வைத்து சாப்பிட ஆசைப்பட்டால் தேங்காய் சட்னி அல்லது காரமான தக்காளி சட்னி வைத்து சாப்பிடலாம். இந்த அடை சுவையானது மட்டுமல்ல அல்லது ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு மீந்து போன சாதத்தை வைத்து எப்படி அடை செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதத்தை வைத்து செய்யக்கூடிய எளிய அடை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 2 கப் மீந்து போன சாதம்
- 2 ஸ்பூன் கடலை மாவு
- 2 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1 இன்ச் இஞ்சி பொடியாக நறுக்கியது
- 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
- 2 ஸ்பூன் தேங்காய் துருவல்
- 1ஸ்பூன் சீரகம்
- ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
- ¼ கப் கொத்தமல்லி இலைகள் நறுக்கியது
- சிறிதளவு கறிவேப்பிலை
- தேவையான அளவு உப்பு
- அடை செய்ய தேவையான எண்ணெய்
செய்முறை:
- மீதமுள்ள சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு கரண்டியாலோ அல்லது கைகளாலோ சாதத்தை நன்கு மசித்துக்கொள்ளுங்கள் அல்லது, மிக்ஸி ஜாரில் போட்டு ஓரளவு கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளலாம்.
- மசித்து வைத்துள்ள இந்தச் சாதத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம், கடலை மாவு, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், துருவிய தேங்காய், மஞ்சள் தூள், உப்பு, கொத்தமல்லி இலைகள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து, கெட்டியான கலவையாக பிசைந்துக்கொள்ளுங்கள்.
- உங்கள் விரல்களிலும் உள்ளங்கைகளிலும் எண்ணெய் தடவிக்கொள்ளுங்கள். பெரிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, ஒரு வாழை இலை மீது வையுங்கள். அதை சிறிய வட்டமாக தட்டிக் கொள்ளவும்.
- இதேபோல் மீதமுள்ள அடை கலவையையும் எடுத்து, வடை வடிவில் தட்டித் தயார் செய்துகொள்ளுங்கள்.
- ஒரு தோசைக்கல்லைச் சூடாக்கி, அதன் மேல் ஒரு அடையை வைக்கவும். அடையைச் சுற்றி ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்.
- மிதமான தீயில், அது லேசான பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும். பிறகு, அதைத் திருப்பிப் போட்டு, மறுபக்கமும் பொன்னிறமாகும் வரை வேகவைக்கவும்.
- இதேபோல் மற்ற அடைகளையும் சுட்டு எடுக்கவும்.
- இதை காரமான சட்னியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
